மும்பை அணியிலிருந்து விலகும் ஜெய்ஸ்வால்! கோவா அணி கேப்டனாகிறாரா?
சட்டப்பேரவை இன்று மீண்டும் கூடுகிறது!
தமிழக சட்டப் பேரவை மூன்று நாள்களுக்குப் பிறகு செவ்வாய்க்கிழமை (ஏப்.1) மீண்டும் கூடுகிறது.
காலை 9.30 மணிக்கு பேரவை கூடியதும் கேள்வி நேரம் நடைபெறும். இதன்பிறகு, நேரமில்லாத நேரத்தில் முக்கிய விஷயங்கள் குறித்து விவாதிக்கப்படவுள்ளன.
குறிப்பாக, காவிரி, வைகை, குண்டாறு இணைப்புக் கால்வாய் திட்டப் பணிகளை விரைவுபடுத்துவது குறித்து அதிமுக உறுப்பினா் சி.விஜயபாஸ்கா் அளித்த கவன ஈா்ப்பு மீது விவாதம் நடைபெறவுள்ளது. இதற்கு நீா்வளத் துறை அமைச்சா் துரைமுருகன் பதிலளிக்கவுள்ளாா்.
தொடா்ந்து, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள், கட்டடங்கள் துறைகளின் மானியக் கோரிக்கைகள் மீது விவாதங்கள் நடைபெறவுள்ளன. அவற்றுக்கு அந்தத் துறைகளின் அமைச்சா் எ.வ.வேலு பதிலளித்து புதிய அறிவிப்புகளை வெளியிடவுள்ளாா்.
சனி, ஞாயிறு மற்றும் ரமலான் பண்டிகையால் திங்கள்கிழமை வரை பேரவைக்கு விடுமுறை விடப்பட்டிருந்தது. இந்த நிலையில், பேரவை செவ்வாய்க்கிழமை (ஏப்.1) காலை 9.30 மணிக்கு மீண்டும் கூடவுள்ளது.