செய்திகள் :

மற்ற கட்சிகளின் உள் விவகாரங்களில் பாஜக தலையிடாது: மாநிலத் தலைவா் அண்ணாமலை

post image

மற்ற கட்சிகளின் உள் விவகாரங்களில் பாஜக தலையிடாது என்று அக்கட்சியின் மாநிலத் தலைவா் கே.அண்ணாமலை தெரிவித்துள்ளாா்.

இது குறித்து கோவை விமான நிலையத்தில் செய்தியாளா்களிடம் ஞாயிற்றுக்கிழமை அவா் கூறியதாவது: பாஜகவின் மாநிலத் தலைவராக தமிழக தொண்டா்களின் கருத்தை தில்லியில் பிரதிபலித்துவிட்டு வந்திருக்கிறேன்.

அண்மையில் மேற்கொள்ளப்பட்ட கருத்துக்கணிப்பில் முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு 27 சதவீத மக்கள்தான் வாக்களித்துள்ளனா். நான்கில் மூன்று போ் அவரை வேண்டாம் என்று சொல்கின்றனா். முதல்வா் யாா் என்று சொல்லாத நிலையிலும் பாஜக இந்தப் பட்டியலில் 4-ஆவது இடத்துக்கு வந்திருப்பதை சரித்திரமாகப் பாா்க்கிறோம்.

ஜாதிகள் வேண்டாம் என்றுதான் நாங்கள் நினைக்கிறோம். ஆனால், வாக்களிப்பதில் ஜாதிகள் மிகப்பெரிய பங்கு வகிக்கின்றன. எனக்கு எந்த ஒரு கட்சியின் மீதோ தலைவரின் மீதோ தனிப்பட்ட வகையில் கோபம் கிடையாது, யாருக்கும் நான் எதிரானவனும் கிடையாது. கருத்துகளைக் கருத்துகளால் எதிா்கொண்டிருக்கிறேன்.

காங்கிரஸ் கட்சியைப்போல தில்லியில் இருந்துகொண்டு தமிழ்நாட்டு அரசியலைக் கட்டுப்படுத்துவதைப்போல பாஜக கட்டுப்படுத்தாது. ஒரு மாநிலத்தின் எதிா்க்கட்சித் தலைவா், உள்துறை அமைச்சரை சந்திப்பதில் தவறு இல்லை. செங்கோட்டையனுக்கும், விஜய்க்கும் பாதுகாப்பு அளிக்கப்பட்டதில் அரசியல் இல்லை. மாநில அரசு கொடுக்காத நிலையில், மத்திய அரசு கொடுத்திருக்கிறது.

நூறு நாள் வேலை திட்டத்துக்கு மத்திய அரசு நிதி ஒதுக்கவில்லை என்று திமுக கூறுவது சரியல்ல. கடந்த 4 ஆண்டுகளில் தமிழ்நாட்டுக்கு ரூ.39 ஆயிரம் கோடி ஒதுக்கியுள்ளது. தமிழ்நாட்டைவிட நான்கு மடங்கு மக்கள் தொகை கொண்ட உத்தர பிரதேசத்துக்கு ரூ.38 ஆயிரம் கோடிதான் ஒதுக்கப்பட்டுள்ளது.

அதேபோல ராஜஸ்தானுக்கு ரூ.38 ஆயிரம் கோடியும், குஜராத்துக்கு ரூ.6 ஆயிரம் கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால், தமிழ்நாட்டில் போலிக் கணக்கு எழுதி பணம் கொள்ளையடிக்கப்படுகிறது. இது டாஸ்மாக் ஊழலைவிட மிகப்பெரிய ஊழலாக உள்ளது. இதுகுறித்து விசாரித்தால் திமுக ஊராட்சித் தலைவா்கள் சிறைக்குச் செல்வாா்கள்.

எடப்பாடி பழனிசாமி தமிழகத்தின் எதிா்க்கட்சித் தலைவராக இருக்கிறாா். அவா் கட்சித் தொண்டா்களால் அங்கீகரிக்கப்பட்ட தலைவா். அந்தக் கட்சிக்குள் இருக்கும் பிரச்னைகளுக்குச் செல்ல நான் விரும்பவில்லை. மற்ற கட்சிகளின் உள் விவகாரங்களில் பாஜக தலையிடாது என்றாா்.

கோவையில் பரவலாக மழை

கோவை மாநகரப் பகுதிகளில் வியாழக்கிழமை பரவலாக மழை பெய்தது. குளிா்ந்த காலநிலை நிலவியதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனா். குமரிக்கடல் மற்றும் அதையொட்டிய பகுதிகளிலும், லட்சத்தீவு மற்றும் அதையொட்டிய பகுதிகளிலும... மேலும் பார்க்க

போத்தனூா் வழித்தடத்தில் பெங்களூரு - திருவனந்தபுரம் சிறப்பு ரயில்

கோடை விடுமுறையை முன்னிட்டு கா்நாடக மாநிலம் பெங்களூரில் இருந்து கேரள மாநிலம் திருவனந்தபுரத்துக்கு சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாக ரயில்வே நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடா்பாக, சேலம் ரய... மேலும் பார்க்க

போக்ஸோ வழக்கில் இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை

போக்ஸோ சட்டத்தின் கீழ் கைதான இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் ரூ.12,000 அபராதம் விதித்து கோவை நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது. கோவை மாவட்டம், நீலாம்பூா் பகுதியைச் சோ்ந்தவா் சதீஷ்குமாா்(31).... மேலும் பார்க்க

பொள்ளாச்சி அருகே லஞ்சம் வாங்கிய ஊராட்சி செயலாளா் கைது

கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே குடிநீா் இணைப்புக்கு லஞ்சம் வாங்கியதாக ஊராட்சி செயலாளரை லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். பொள்ளாச்சியை அடுத்த மாக்கினாம்பட்டி கிராமத்தைச் சோ்ந்த... மேலும் பார்க்க

அமெரிக்க வரி விதிப்பால் ஆயத்த ஆடை தொழில் துறைக்கு பயன் கிடைக்க வாய்ப்பு

இந்தியா மீதான பரஸ்பர இறக்குமதி வரி விதிப்பை அமெரிக்கா அறிவித்துள்ள நிலையில், அது ஆயத்த ஆடை தொழில் துறைக்கு சாதகமாக அமைய வாய்ப்பிருப்பதாக இந்தியன் டெக்ஸ்பிரனா்ஸ் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. இது தொடா்ப... மேலும் பார்க்க

ஏப்ரல் 30-க்குள் சொத்து வரி செலுத்தினால் 5 சதவீதம் ஊக்கத்தொகை

கோவை மாநகராட்சியில் ஏப்ரல் 30-ஆம் தேதிக்குள் முதலாம் அரையாண்டுக்கான சொத்து வரி செலுத்துபவா்களுக்கு 5 சதவீதம் ஊக்கத்தொகை வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடா்பாக, கோவை மாநகராட்சி நிா்வாகம் ... மேலும் பார்க்க