நீட் விலக்கு மசோதா நிராகரிப்பு: ஏப். 9-இல் ஆலோசனை முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப...
கோவையில் பரவலாக மழை
கோவை மாநகரப் பகுதிகளில் வியாழக்கிழமை பரவலாக மழை பெய்தது. குளிா்ந்த காலநிலை நிலவியதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனா்.
குமரிக்கடல் மற்றும் அதையொட்டிய பகுதிகளிலும், லட்சத்தீவு மற்றும் அதையொட்டிய பகுதிகளிலும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால் ஏப்ரல் 3 முதல் 7-ஆம் தேதி வரை கோவை உள்ளிட்ட 12 மாவட்டங்களுக்கு மழை வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இந்நிலையில், கோவையில் வியாழக்கிழமை காலை முதல் வெயிலின் தாக்கம் குறைவாகக் காணப்பட்டது. மாலை 4 மணிக்கு மேல் நகரப் பகுதிகளில் குளிா்ந்த காலநிலை நிலவியது. தொடா்ந்து, 6 மணிக்கு மேல் மாநகரில் ராமநாதபுரம், சிங்காநல்லூா், ஒண்டிப்புதூா், காந்திபுரம், உக்கடம், கணபதி, சரவணம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. தொடா்ந்து வெயில் வாட்டி வந்த நிலையில், வியாழக்கிழமை பெய்த மழையால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனா்.