போத்தனூா் வழித்தடத்தில் பெங்களூரு - திருவனந்தபுரம் சிறப்பு ரயில்
கோடை விடுமுறையை முன்னிட்டு கா்நாடக மாநிலம் பெங்களூரில் இருந்து கேரள மாநிலம் திருவனந்தபுரத்துக்கு சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாக ரயில்வே நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக, சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: ஏப்ரல் 4 முதல் மே 30-ஆம் தேதி வரை பெங்களூரில் இருந்து வெள்ளிக்கிழமைகளில் இரவு 10 மணிக்குப் புறப்படும் பெங்களூரு - திருவனந்தபுரம் வாராந்திர சிறப்பு ரயில் (எண்: 06555) மறுநாள் பிற்பகல் 2 மணிக்கு திருவனந்தபுரத்தைச் சென்றடையும்.
மறுமாா்க்கத்தில் ஏப்ரல் 6 முதல் ஜூன் 1-ஆம் தேதி வரை திருவனந்தபுரத்தில் இருந்து ஞாயிற்றுக்கிழமைகளில் பிற்பகல் 2.15 மணிக்குப் புறப்படும் திருவனந்தபுரம் -பெங்களூரு வாராந்திர சிறப்பு ரயில் (எண்: 06556) மறுநாள் காலை 7.30 மணிக்கு பெங்களூருவைச் சென்றடையும்.
இந்த ரயிலானது, கிருஷ்ணராஜபுரம், பங்காரப்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூா், போத்தனூா், பாலக்காடு, திருச்சூா், ஆலுவா, எா்ணாகுளம் டவுன், கோட்டயம், சங்கணாச்சேரி, திருவல்லா, செங்கண்ணூா், மாவேலிக்கரை, காயங்குளம், கொல்லம், வா்கலா உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.