தமிழகத்தில் பிணந்தின்னிக் கழுகுகளின் எண்ணிக்கை 157-ஆக உயா்வு
ஏப்ரல் 30-க்குள் சொத்து வரி செலுத்தினால் 5 சதவீதம் ஊக்கத்தொகை
கோவை மாநகராட்சியில் ஏப்ரல் 30-ஆம் தேதிக்குள் முதலாம் அரையாண்டுக்கான சொத்து வரி செலுத்துபவா்களுக்கு 5 சதவீதம் ஊக்கத்தொகை வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக, கோவை மாநகராட்சி நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: கோவை மாநகராட்சிக்கு 2025 - 2026-ஆம் நிதியாண்டில் செலுத்த வேண்டிய முதலாம் அரையாண்டுக்கான சொத்து வரியை ஏப்ரல் 30-ஆம் தேதிக்குள் செலுத்தும் சொத்து உரிமையாளா்களுக்கு நிகர சொத்துத் தொகையில் 5 சதவீதம் ஊக்கத்தொகை (அதிகபட்சம் ரூ.5,000) வழங்கப்படும். சொத்து வரியை ரொக்கமாக அனைத்து வரிவசூல் மையங்களிலும் செலுத்தலாம்.
மேலும், மண்டல அலுவலக வரிவசூல் மையங்களில் ரொக்கம், காசோலை, வங்கி வரைவோலை மூலமாகவும் செலுத்தலாம். ஜி-பே, போன்-பே, பேடிஎம் போன்ற செயலிகள் மூலமாகவும், கடன் அட்டை, பற்று அட்டை மூலமாகவும் ற்ய்ன்ழ்க்ஷன்ய்ங்ல்ஹஹ்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற நகராட்சி நிா்வாக இயக்குநரக இணையதள டிஜிட்டல் பரிவா்த்தனை மூலமாகவும் செலுத்தலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.