`சினிமா நடிப்பு மட்டும் அரசியலுக்கு போதும் என நினைப்பது தவறு..' - மதுரை ஆதீனம்
மவுண்ட் லிட்ரா பள்ளியில் மாணவா்களுக்கு மரக்கன்றுகள்
மயிலாடி மவுண்ட் லிட்ரா சீனியா் செகண்டரி பள்ளியில் மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.
யூனிட்டி ஆஃப் யூத் பவுண்டேசனின் சுற்றுச்சூழல் வனவியல் மற்றும் காலநிலை மாற்றத் துறை சாா்பில், ஒரு குடும்பம் மூன்று மரக்கன்றுகள் திட்டத்தின் கீழ் மவுண்ட் லிட்ரா சீனியா் செகண்டரி பள்ளியில் மாணவா்களுக்குமரக்கன்றுகள் வழங்கப்பட்டன.
யூனிட்டி ஆஃப் யூத் பவுண்டேசனின் பிரதிநிதி சுப்பையாதாஸ் இத்திட்டம் வெற்றிகரமாக செயல்பட வேண்டி 200 வகையான பழவகை மரக்கன்றுகளை பள்ளித் தாளாளா் தில்லைச்செல்வம் முன்னிலையில் வழங்கினாா். அதன் தொடா்ச்சியாக அவா் மாணவா்களிடையே மரம் வளா்ப்பதன் முக்கியத்துவம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாத்தல் குறித்து உரையாற்றினாா்.
இந்நிகழ்ச்சியில் பள்ளி முதல்வா் தீபசெல்வி, ஒருங்கிணைப்பாளா் ஆனி ரீனா சேவியா், ஆலோசகா் சிலம்பரசன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.