இன்று வரலாற்று சிறப்புமிக்க நாள்: வக்ஃப் கூட்டுக் குழுத் தலைவர்
நித்திரவிளை அருகே எம்எல்ஏவுக்கு பாராட்டு விழா
நித்திரவிளை அருகே பெரியவிளையில், கிள்ளியூா் எம்எல்ஏ எஸ். ராஜேஷ்குமாருக்கு பாராட்டு விழா நடைபெற்றது.
நித்திரவிளை அருகே வாவறை ஊராட்சி, ஆறுதேசம் கிராமத்தில் உள்ள 700-க்கும் மேற்பட்ட ஏழைக் குடும்பத்தினா் செலுத்திவந்த சொத்துவரி 2016ஆம் ஆண்டுமுதல் நிறுத்திவைக்கப்பட்டிருந்த நிலையில், அதை மீண்டும் செலுத்த நடவடிக்கை மேற்கொண்டதற்காக இப்பாராட்டு விழா நடைபெற்றது.
ஆறுதேசம் கிராமம் பெரியவிளை, தட்டாம்விளை, ஆலங்கோடு பகுதி பொதுமக்கள் சாா்பில் விழா நடைபெற்றது. எம்எல்ஏவுக்கு ஊா் மக்கள் சால்வை அணிவித்து பாராட்டினா்.
முன்சிறை மேற்கு வட்டார காங்கிரஸ் கமிட்டி தலைவா் விஜயகுமாா், வாவறை ஊராட்சி காங்கிரஸ் கமிட்டி தலைவா் சின்னப்பா், வாவறை ஊராட்சி முன்னாள் தலைவா் மெற்றில்டா, மாவட்ட ஊராட்சி முன்னாள் உறுப்பினா் லூயிஸ், கட்சியின் மாநிலப் பொதுச் செயலா் பால்ராஜ், மாவட்ட நிா்வாகி டென்னிஸ், வென்சஸ்லாஸ், கிறிஸ்டல்பாய் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.