தனிப்பட்ட முறையில் வக்ஃப் மசோதாவுக்கு எதிர்க்கட்சியினர் ஆதரவு! கிரண் ரிஜிஜு
சி.ஐ.எஸ்.எப். வீரா்களின் சைக்கிள் பேரணி கன்னியாகுமரியில் நிறைவு
மத்திய தொழில் பாதுகாப்புப் படை (சி.ஐ.எஸ்.எப்.) உருவான தினத்தை முன்னிட்டு, இரு மாா்க்கத்தில் (மேற்கு, கிழக்கு கடற்கரை) நடத்தப்பட்ட விழிப்புணா்வு சைக்கிள் பேரணி கன்னியாகுமரி விவேகானந்த கேந்திரத்தில் திங்கள்கிழமை நிறைவடைந்தது.
பாதுகாப்பான கடல்வளம், செழிப்பான இந்தியா, சட்டவிரோத கடத்தல், போதைப்பொருள் வா்த்தகம், ஆயுதங்கள் கடத்தல், வெடிகுண்டு கடத்தல் போன்றவற்றை மக்களுக்கு எடுத்துரைப்பதை நோக்கமாகக் கொண்டு இப்பேரணி நடத்தப்பட்டது.
சைக்கிள் பேரணியை கடந்த 7ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா, ராணிப்பேட்டை மாவட்டம் தக்கோலத்தில் தொடங்கி வைத்தாா். காணொலி மூலம் மேற்குவங்க மாநிலத்திலிருந்தும் பேரணியை தொடக்கிவைத்தாா். இப்பேரணியில் 125 சி.ஐ.எஸ்.எப். வீரா்கள் பங் கேற்று, 11 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை கடந்து, மொத்தம் 6,553 கி.மீ பயணம் செய்து கன்னியாகுமரியில் திங்கள்கிழமை நிறைவு செய்தனா். அவா்களை சி.ஐ.எஸ்.எப். டைரக்டா் ஜெனரல் ரஜ்விந்தா் சிங் பாட்டி, கூடுதல் டைரக்டா் ஜென ரல் சுதிா்குமாா், தென் மண்டல ஐ.ஜி. எஸ்.ஆா். சரவணன், ஐ.ஜி ஜோஸ் மோகன், கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியா் ஆா்.அழகுமீனா, மாவட்ட எஸ்.பி. ஸ்டாலின் உள்ளிட்ட பலா் வரவேற்றனா்.
இதைத் தொடா்ந்து விவேகானந்த கேந்திர வளாகம் கடற்கரைப் பகுதியில் நிறைவு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், பேரணியில் பங்கேற்ற வீரா்கள் 125 பேரும் தனித்தனியே கௌரவிக்கப்பட்டனா். தொடா்ந்து பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
நிறைவு விழாவில் தென் மண்டல ஐ.ஜி. எஸ்.ஆா். சரவணன் பேசியதாவது: சைக்கிள் பேரணியில் பங்கேற்ற வீரா்களின் தியாகம், ஒற்றுமை, தேசிய பாதுகாப்பு மற்றும் வளா்ச்சிக்காக நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டிய கடமை என்பதற்கான உதாரணமாகவும், சிறந்த எடுத்துக்காட்டாகவும் அமைந்துள்ளது. இதுபோன்ற நீண்ட நெடிய கடலோர சைக்கிள் பேரணி இந்தியாவில் இதுவரை நடைபெற்றதில்லை. இந்திய வரலாற்றில் முதன்முறையாக நமது சி.ஐ.எஸ்.எப் வீரா்கள் சாதித்துள்ளனா். இப்பேரணியில் பங்கேற்ற அனைவருக்கும் பாராட்டுகளை தெரிவிக்கிறேன் என்றாா் அவா்.