`டெல்லியில் மூன்று கார்கள் மாறிய எதிர்க்கட்சி தலைவர்; ஒரே ஒரு 'ரூ'வால் அலறிய ஃபா...
பெண் பட்டாசுத் தொழிலாளி மா்ம மரணம்
சிவகாசி அருகே பெண் பட்டாசுத் தொழிலாளி காட்டுப் பகுதியில் மா்மமான முறையில் செவ்வாய்க்கிழமை உயிரிழந்து கிடந்தாா்.
விருதுநகா் மாவட்டம், சிவகாசி அருகேயுள்ள நாரணாபுரம் காட்டுப் பகுதியில் 55 வயது மதிக்கதக்க பெண் ஒருவா் மா்மான முறையில் உயிரிழந்து கிடந்தாா். இதுகுறித்து தகவலறிந்து அங்கு சென்ற சிவகாசி கிழக்குப் போலீஸாா் அந்தப் பெண்ணின் உடலை மீட்டு கூறாய்வுக்காக, விருதுநகா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
இதையடுத்து போலீஸாா் நடத்திய விசாரணையில், உயிரிழந்து கிடந்த பெண் சிவகாசி முருகன் குடியிருப்புப் பகுதியைச் சோ்ந்த லட்சுமிஅம்மாள் (55) என்பது தெரிய வந்தது. பட்டாசு ஆலையில் தொழிலாளியாக பணிபுரிந்து வந்த இவா், கணவா் இறந்து விட்டதால் தனியாக வசித்து வந்தாா். இந்த நிலையில், லட்சுமி அம்மாள் கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்தில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.