செய்திகள் :

`டெல்லியில் மூன்று கார்கள் மாறிய எதிர்க்கட்சி தலைவர்; ஒரே ஒரு 'ரூ'வால் அலறிய ஃபாசிஸ்ட்ஸ்' - உதயநிதி

post image

தமிழ்நாடு சட்டபேரவை கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இந்தக் கூட்டத்தொடரில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், "அவசர பணியாக டெல்லி சென்று திரும்பிய எதிர்க்கட்சி தலைவர், துணை எதிர்க்கட்சி தலைவர் நான் எப்போது பதிலளித்தாலும் அவையில் இருப்பதில்லை. இதை தொடர்ந்து கவனித்து வருகிறேன்.

மூன்று கார்கள் மாறி...

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, என்னுடைய காரில் தவறுதலாக ஏற முயன்றப்போது, 'எப்போது வேண்டுமானாலும் என்னுடைய காரை எடுத்து செல்லுங்கள்' என்று கூறினேன்.

"எதிர்க்கட்சி தலைவருக்கு வாழ்த்துகள்" - உதயநிதி ஸ்டாலின்
"எதிர்க்கட்சி தலைவருக்கு வாழ்த்துகள்" - உதயநிதி ஸ்டாலின்

அதற்கு அண்ணன் ஓ.பி.எஸ் எங்களது கார் எப்போது தவறாக போகாது என்று கூறினார். ஆனால், இப்போது டெல்லியில் ரூட் மாறி கிட்டதட்ட மூன்று கார்கள் மாறி, 'அவர்களது கட்சி ஆபீஸ் சென்றதாக' கூறினார்கள். வாழ்த்துக்கள்.

ஒரே ஒரு 'ரூ'

பாசிஸ்டுகள் எத்தனை ரூல்ஸ் போட்டு தமிழகத்தை அடக்க நினைத்தாலும், பட்ஜெட்டில் ஒரே ஒரு 'ரூ'வை போட்டு அவர்களை அலற வைத்தவர் நம்முடைய முதல்வர். இந்தி திணிப்பு மட்டுமல்ல, இங்கு எந்த திணிப்பையும் கொண்டுவர முடியாது" என்று பேசினார்.