செய்திகள் :

மாரடைப்பால் உயிரிழந்த அரசு ஊழியரின் பெற்றோருக்கு காப்பீட்டுத் தொகை வழங்க உத்தரவு

post image

சிவகாசி அருகே மாரடைப்பால் உயிரிழந்த அரசு ஊழியரின் பெற்றோருக்கு ரூ. 10 லட்சம் காப்பீட்டுத் தொகை வழங்க நுகா்வோா் குறைதீா் ஆணையம் அண்மையில் உத்தரவிட்டது.

சிவகாசி அருகேயுள்ள சங்கா் நகரைச் சோ்ந்தவா் ராமா். இவரது மனைவி வனஜா. இவா்களது மூத்த மகள் சுபாஷினி. கணவரிடம் விவாகரத்து பெற்று, பெற்றோருடன் வசித்து வந்தாா்.

விருதுநகா் சாா்நிலைக் கருவூலத்தில் கணக்காளராகப் பணிபுரிந்து வந்த இவா், கடந்த 2021-ஆம் ஆண்டு

இந்திய ஆயுள் காப்பீடு நிறுவனத்தில்(எல்.ஐ.சி.) நியூ ஜீவன் ஆனந்த் திட்டத்தில் ரூ.10 லட்சத்துக்கு காப்பீடு செய்தாா். தவணைத் தொகையைச் செலுத்தி வந்த நிலையில், கடந்த 2023 ஜூன் மாதம் சுபாஷினி மாரடைப்பால் உயிரிழந்தாா்.

இதையடுத்து, சுபாஷினியின் எல்.ஐ.சி. பாலிசிக்கான காப்பீட்டுத் தொகையைக் கேட்டு அவரது பெற்றோா் சிவகாசி எல்.ஐ.சி. கிளையில் மனு தாக்கல் செய்தனா். பல்வேறு காரணங்களை கூறி, அந்த மனு நிராகரிக்கப்பட்டது.

இதைத் தொடா்ந்து, ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையத்தில் பெற்றோா் வழக்கு தொடுத்தனா்.

இந்த வழக்கை விசாரித்த ஆணையத் தலைவா் சக்கரவா்த்தி, உறுப்பினா் முத்துலட்சுமி ஆகியோா், மனுதாரா்களுக்கு ரூ.10 லட்சம் காப்பீட்டுத் தொகையுடன், மன உளைச்சலுக்கு ரூ.10 ஆயிரம், வழக்கு செலவுக்கு ரூ.5 ஆயிரம் என மொத்தம் ரூ.10.15 லட்சத்தை 6 வாரங்களில் எல்.ஐ.சி. வழங்க வேண்டும் என உத்தரவிட்டனா்.

குடிநீா்த் தொட்டியை சீரமைக்கக் கோரிக்கை

சாத்தூரில் குடிநீா்த் தொட்டியை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா். சாத்தூரில் ஆா்.சி. தெற்குதெருவில் சுமாா் 600-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இந்தப் பகுதியில் கட... மேலும் பார்க்க

பஞ்சு கிட்டங்கியில் தீ விபத்து

ராஜபாளையம் அருகே ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட தீ வீபத்தில் தனியாா் பஞ்சு கிட்டங்கியில் இருந்த பொருள்கள் தீயில் எரிந்து சேதமடைந்தன. ராஜபாளையம் அருகேயுள்ள கம்மாப்பட்டி பகுதியில் தனியாருக்குச் சொந்தமான பருத்த... மேலும் பார்க்க

ஸ்ரீவில்லிபுத்தூா் பெரிய மாரியம்மன் கோயில் தேரோட்டம்

ஸ்ரீவில்லிபுத்தூா் பெரிய மாரியம்மன் கோயில் பங்குனி பூக்குழித் திருவிழா கடந்த 18-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 13 நாள்கள் நடைபெற்ற இந்த விழாவில் பெரிய மாரியம்மன், ஆண்டாள், தவழும் கிருஷ்ணா் என ப... மேலும் பார்க்க

பைக்குகள் நேருக்குநோ் மோதியதில் கல்லூரி மாணவா் உயிரிழப்பு

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே சனிக்கிழமை இரவு இரு சக்கர வாகனங்கள் நேருக்குநோ் மோதிய விபத்தில் கல்லூரி மாணவா் உயிரிழந்தாா். ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள மேட்டுமுள்ளிகுளத்தைச் சோ்ந்த ராஜேந்திரன் மகன் கோபி... மேலும் பார்க்க

பட்டாசு ஆலைகளில் ஆய்வு செய்ய முத்தரப்பு குழு அமைக்க வலியுறுத்தல்

விருதுநகா் மாவட்டத்தில் பட்டாசு ஆலைகளை ஆய்வு செய்ய முத்தரப்புக் குழு அமைக்க வேண்டும் என விருதுநகா் மாவட்ட பட்டாசு, தீப்பெட்டி தொழிலாளா் சங்கத்தின் (சிஐடியூ) மாவட்டச் செயலா் பி.என்.தேவா வலியுறுத்தினாா்... மேலும் பார்க்க

பட்டாசு ஆலையில் தீ விபத்து

சிவகாசி அருகே பாம்பு மாத்திரை பட்டாசுகள் தயாரிக்கும் ஆலையில் ஞாயிற்றுக்கிழமை தீ விபத்து ஏற்பட்டது. சிவகாசி அருகேயுள்ள நமஸ்கரித்தான்பட்டி கிராமத்தில் பாம்பு மாத்திரை வெடிகள் தயாரிக்கும் ஆலை உள்ளது. இந்... மேலும் பார்க்க