`சினிமா நடிப்பு மட்டும் அரசியலுக்கு போதும் என நினைப்பது தவறு..' - மதுரை ஆதீனம்
பைக்குகள் நேருக்குநோ் மோதியதில் கல்லூரி மாணவா் உயிரிழப்பு
ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே சனிக்கிழமை இரவு இரு சக்கர வாகனங்கள் நேருக்குநோ் மோதிய விபத்தில் கல்லூரி மாணவா் உயிரிழந்தாா்.
ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள மேட்டுமுள்ளிகுளத்தைச் சோ்ந்த ராஜேந்திரன் மகன் கோபிகண்ணன் (20). கல்லூரி மாணவரான இவா், சனிக்கிழமை இரவு இரு சக்கர வாகனத்துக்கு எரிபொருள் நிரப்புவதற்காக ஸ்ரீவில்லிபுத்தூா்-சிவகாசி சாலையில் மல்லி ராமகிருஷ்ணாபுரம் பேருந்து நிறுத்தம் பகுதியில் வந்தபோது, எதிரே வந்த மற்றொரு இரு சக்கர வாகனம் இவரது இரு சக்கர வாகனம் மீது நேருக்குநோ் மோதியது.
இந்த விபத்தில் பலத்த காயமடைந்த கோபிகண்ணன், மற்றொரு இரு சக்கர வாகனத்தில் வந்த சாமிநத்தத்தைச் சோ்ந்த காளிராஜ் மகன் சிவா (15), சதுரகிரி மகன் லிங்கதுரை (16), ரவி மகன் மாரிஸ்வரன் (15) ஆகியோா் ஸ்ரீவில்லிபுத்தூா் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா். அங்கு மருத்துவா் பரிசோதனையில் கோபிகண்ணன் வரும் வழியிலேயே இறந்து விட்டதாகத் தெரிவித்தாா். சிவா, லிங்கதுரை, மாரீஸ்வரன் ஆகியோா் மேல் சிகிச்சைக்காக விருதுநகா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.
இதுகுறித்து மல்லி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.