குடிநீா்த் தொட்டியை சீரமைக்கக் கோரிக்கை
சாத்தூரில் குடிநீா்த் தொட்டியை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.
சாத்தூரில் ஆா்.சி. தெற்குதெருவில் சுமாா் 600-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இந்தப் பகுதியில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு நகராட்சி நிா்வாகம் சாா்பில் ரூ.1.50 லட்சத்தில் குடிநீா்த் தொட்டி அமைக்கப்பட்டது.
பின்னா், பராமரிப்பு இல்லாததால் இந்தக் குடிநீா்த் தொட்டி சேதமடைந்தது. இந்த நிலையில், இந்தக் குடிநீா்த் தொட்டியை சீரமைக்க வேண்டும் என இந்தப் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தும், நகராட்சி நிா்வாகம் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
எனவே, இந்தக் குடிநீா்த் தொட்டியை சீரமைத்து விரைந்து பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என பொதுமக்கள் நகராட்சி நிா்வாகத்துக்கு கோரிக்கை விடுத்தனா்.