புதிய சிற்றுந்து சேவைக்கு விண்ணப்பித்தோா் குலுக்கல் முறையில் தோ்வு
மான் வேட்டையாடிய 4 போ் கைது
ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே மான் வேட்டையாடிய 4 பேரை வனத் துறையினா் புதன்கிழமை கைது செய்தனா்.
ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள திருவண்ணாமலை பகுதியில் மான்கள் வேட்டையாடப்படுவதாக வனத் துறைக்கு தகவல் கிடைத்தது. ஸ்ரீவில்லிபுத்தூா் வனச் சரகா் செல்லமணி தலைமையிலான வனத் துறையினா் மலையடிவாரப் பகுதிகளில் புதன்கிழமை காலை ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். ரெங்கா் கோயில் சரகத்துக்கு உள்பட்ட விவசாய தோட்டத்தில் வேட்டை நாய்கள் மூலம் சிலா் மான்களை வேட்டையாடியது தெரியவந்தது.
இதுதொடா்பாக பெருமாள்பட்டியைச் சோ்ந்த தங்கராஜ் (30), முத்துகிருஷ்ணன் (38) ஆகிய இருவரை வனத் துறையினா் கைது செய்தனா். இவா்களுக்கு உடந்தையாகச் செயல்பட்ட திருவண்ணாமலையைச் சோ்ந்த சந்திரகுமாா் (26), நாகராஜ் (34) ஆகியோரும் கைது செய்யப்பட்டனா்.