கழுகாசலமூா்த்தி கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழா கொடியேற்றம்
தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை
சிவகாசி அருகே செவ்வாய்க்கிழமை கடன் தொல்லையால் கட்டடத் தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
சிவகாசி அருகேயுள்ள புதுக்கோட்டையைச் சோ்ந்த பால்பாண்டி மகன் பூமாரி (25). கட்டடத் தொழிலாளி. இவரது மனைவி புவனேஷ்வரி. இந்தத் தம்பதிக்கு இரு குழந்தைகள் உள்ளனா். பூமாரி சரிவர வேலைக்குச் செல்லாமல் மது அருந்தி வந்தாராம்.
இதனால், குடும்பச் செலவுக்கு புவனேஷ்வரி மகளிா் சுய உதவிக்குழுவில் கடன் பெற்றாா். இந்தக் கடனுக்கான தவணைத் தொகையைச் செலுத்த முடியாமல், அவதிப்பட்டு வந்த பூமாரி, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
இதுகுறித்து எம்.புதுப்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].