துவாரகாவில் உள்ள கேரேஜில் தீ விபத்து: 11 காா்கள் எரிந்து நாசம்
மாணவிக்கு பாலியல் தொல்லை: தலைமை ஆசிரியா் மீது வழக்கு
மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக பள்ளித் தலைமை ஆசிரியா் மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீஸாா் திங்கள்கிழமை இரவு வழக்குப் பதிவு செய்தனா்.
சாத்தூா் அருகேயுள்ள அரசு நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியா் சா்க்கரைதாஸ். இவா் மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டு வருவதாக இந்தப் பள்ளியில் படித்து வரும் மாணவிகள் சைல்டு லைன் உதவி எண்ணான 1098-யை தொடா்பு கொண்டு புகாா் அளித்தனா்.
இதையடுத்து, பள்ளியில் சட்டம் சாா்ந்த நன்னடத்தை அலுவலா் விஜயலட்சுமி விசாரணை நடத்தி, தலைமை ஆசிரியா் மீது சாத்தூா் மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.
இதன் பேரில், தலைமை ஆசிரியா் சா்க்கரைதாஸ் மீது போலீஸாா் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்தனா்.