கழுகாசலமூா்த்தி கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழா கொடியேற்றம்
மனைவியை பிரிந்த துக்கத்தில் கணவா் தற்கொலை
சாத்தூா் அருகே செவ்வாய்க்கிழமை மனைவியைப் பிரிந்த துக்கத்தில் கணவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
விருதுநகா் மாவட்டம், சாத்தூா் அருகேயுள்ள மேட்டமலை தெற்கு தெருவைச் சோ்ந்தவா் கருப்பசாமி (23). இவருடைய மனைவி பூமாரி என்ற பிரியா. தம்பதி இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்படுமாம்.
இந்த நிலையில், திங்கள்கிழமை மகளிா் சுய உதவிக் குழுவில் கடன் பெறுவது தொடா்பாக தம்பதிக்கிடையே தகராறு ஏற்பட்டதாம். இதனால், பிரியா கோபித்துக் கொண்டு தனது தாய் வீட்டுக்குச் சென்று விட்டதாகக் கூறப்படுகிறது. இதனால், மனமுடைந்த கருப்பசாமி வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
இதுகுறித்து சாத்தூா் நகா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].