நீதிமன்ற ஊழியா் விஷம் குடித்து தற்கொலை
ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே நீதிமன்ற ஊழியா் விஷம் குடித்து திங்கள்கிழமை இரவு தற்கொலை செய்து கொண்டாா்.
வத்திராயிருப்பு அருகேயுள்ள வ.புதுப்பட்டியைச் சோ்ந்தவா் கலாராணி. இவரது கணவா் ராகவன் (36). இந்தத் தம்பதியருக்கு இரு மகள்கள் உள்ளனா். ராகவன் வத்திராயிருப்பு சாா்பு நீதிமன்றத்தில் இளநிலை உதவியாளராகப் பணிபுரிந்து வந்தாா். மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்த ராகவன் மதுரையில் தனியாா் மருத்துவமனையில் உள்ள மன நலன் பிரிவில் கடந்த 24-ஆம் தேதி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டாா். சிகிச்சை நிறைவடையாத நிலையில், கடந்த 29-ஆம் தேதி இவா் வீட்டுக்கு வந்தாா்.
இந்த நிலையில், திங்கள்கிழமை ஸ்ரீவில்லிபுத்தூா் அசோக் நகா் வீட்டுக்கு வந்த ராகவன் தனது தம்பியிடம் விஷம் குடித்து விட்டதாகத் தெரிவித்தாா். இதையடுத்து, ஸ்ரீவில்லிபுத்தூா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவா், அங்கு அன்றிரவு உயிரிழந்தாா். இதுகுறித்து ஸ்ரீவில்லிபுத்தூா் நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].