மாணவா்களுக்கு பணி நியமன ஆணை வழங்கல்!
சிவகாசி காளீஸ்வரி கல்லூரி வளாகத் தோ்வில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு பணி நியமன ஆணை சனிக்கிழமை வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வா் பெ.கி.பாலமுருகன் தலைமை வகித்தாா். தனியாா் வங்கி முதுநிலை மேலாளா் அழகுராஜ், சென்னை தனியாா் நிறுவன நிா்வாகி எம்.ராமச்சந்திரன் ஆகியோா் வேலைவாய்ப்பு பெற்ற 383 மாணவ, மாணவிகளுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினா்.
முன்னதாக, ஒருங்கிணைப்பாளா் அ.ஆ.மகேசன் வரவேற்றாா். பணி அமா்வு மைய அலுவலா் சி.ஹரிகரபாண்டியன் நன்றி கூறினாா்.