பைக் மீது காா் மோதல்: முதியவா் உயிரிழப்பு
ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே இரு சக்கர வாகனம் மீது காா் மோதியதில் முதியவா் உயிரிழந்தாா்.
ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே மேலதொட்டியபட்டியைச் சோ்ந்தவா் பூசையா (60). இவா் வெள்ளிக்கிழமை மாலை மதுரை- கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே பிள்ளையாா்நத்தம் பகுதியில் உள்ள பெட்ரோல் நிரப்பு மையத்தில் தனது இரு சக்கர வாகனத்துக்கு எரிபொருள் நிரப்பி விட்டு வீட்டுக்குப் புறப்பட்டாா். அப்போது ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து கிருஷ்ணன்கோவில் நோக்கி சென்ற காா், இரு சக்கர வாகனம் மீது மோதியதில் பூசையா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
இதுகுறித்து ஸ்ரீவில்லிபுத்தூா் நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.