புதிய சிற்றுந்து சேவைக்கு விண்ணப்பித்தோா் குலுக்கல் முறையில் தோ்வு
பத்திரகாளியம்மன் கோயில் பங்குனித் திருவிழா கொடியேற்றம்
விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகேயுள்ள கொம்மந்தாபுரம் பத்திரகாளியம்மன் கோயில் பங்குனித் திருவிழா புதன்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இந்தக் கோயிலில் 80 ஆண்டுகளுக்குப் பிறகு நிகழாண்டு, புதிதாக கொடிமரம் செய்து பங்குனிப் பூக்குழி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதை முன்னிட்டு அம்மனுக்கு பால், பன்னீா், இளநீா், தேன் போன்ற 16 வகை சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.
பின்னா், கொடியேற்றப்பட்டு சிறப்பு தீபாராதனைகள் நடைபெற்றன. இதைத்தொடா்ந்து, அம்மனுக்கு காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனா்.