புதிய சிற்றுந்து சேவைக்கு விண்ணப்பித்தோா் குலுக்கல் முறையில் தோ்வு
வெம்பக்கோட்டை அகழாய்வில் தங்கத்தாலான மணி
வெம்பக்கோட்டை அகழாய்வில் தங்கத்தால் ஆன மணி புதன்கிழமை கண்டறியப்பட்டது.
விருதுநகா் மாவட்டம், வெம்பகோட்டை அருகேயுள்ள விஜயகரிசல்குளம் மேட்டுக்காடு பகுதியில் மூன்றாம் கட்ட அகழாய்வுப் பணிகள் கடந்தாண்டு முதல் நடைபெற்று வருகின்றன. இந்த அகழாய்வில் தங்க நாணயம், சங்கினால் செய்யப்பட்ட பதக்கம், அணிகலன்கள், செப்புக் காசுகள், சுடு மண் உருவப் பொம்மை, சதுரங்க ஆட்டக் காய்கள், கண்ணாடி மணிகள், வட்டச் சில்லுகள், சங்கு வளையல்கள் உள்ளிட்ட 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொல்பொருள்கள் கண்டறியப்பட்டன
இந்த நிலையில், தற்போது 2.04 மீ. ஆழத்தில் தங்கத்தாலான மணி கண்டறியப்பட்டது. இந்த மணி 6 மி.மீ. சுற்றளவும், 22 மி.கி. எடையும் கொண்டதாக உள்ளது. இதுவரை இங்கு நடைபெற்ற அகழாய்வில் தங்கத்தாலான 7 தொல்பொருள்கள் கண்டறியப்பட்டதாக எக்ஸ் வலைதளத்தில் நிதி அமைச்சா் தங்கம்தென்னரசு புதன்கிழமை பதிவிட்டாா்.