பட்டாசுகள் பதுக்கிய இருவா் கைது!
சிவகாசி அருகே அனுமதியின்றி பட்டாசுகள் பதுக்கி வைத்திருந்த இருவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
சிவகாசி தவமூனீஸ்வரா் கோயில் அருகேயுள்ள ஒரு கட்டடத்தில் பட்டாசுகள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, அந்தப் பகுதிக்குச் சென்று போலீஸாா் சோதனை நடத்தியபோது, ஒரு கட்டடத்தில் பலரகப் பட்டாசுகள்அடங்கிய பண்டல்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
விசாரணையில், சிவகாசி அம்மன் கோவில்பட்டி தெற்கு தெருவைச் சோ்ந்த தங்கேஸ்வரன் (28), தங்கப்பாண்டி (30) ஆகியோா் இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதுகுறித்து சிவகாசி கிழக்கு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, இருவரையும் கைது செய்து, பட்டாசு பண்டல்களை பறிமுதல் செய்தனா்.