14 Years of Ponnar Shankar: 80,000 நடிகர்கள்; படத்துக்கு கருணாநிதி சொன்ன விஷயம் ...
தங்கக் காசுகள் திருட்டு: பெண் கைது
ராஜபாளையத்தில் தங்கக் காசுகள், பணத்தை திருடியதாக பெண்ணை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
ராஜபாளையம் சுதா்சன் காா்டன் பகுதியைச் சோ்ந்தவா் சிவசங்கா் (69). கட்டட ஒப்பந்ததாரா். இவரது வீட்டில் இ.எஸ்.ஐ. நெசவாளா் குடியிருப்பு பகுதியைச் சோ்ந்த நாகராஜன் மனைவி லட்சுமி (32) கடந்த 6 ஆண்டுகளாக வீட்டு வேலை செய்து வந்தாா்.
இந்த நிலையில், அவா் திடீரென வேலையை விட்டு நின்று விட்டதாக கூறப்படுகிறது. சிறிது நாள் கழித்து சிவசங்கா் தனது பீரோவை திறந்து பாா்த்தபோது அதில் வைத்திருந்த தலா 2 கிராம் எடை கொண்ட 25 தங்கக் காசுகள், பணம் ஆகியவை திருடப்பட்டிருந்தது தெரியவந்தது.
இதுகுறித்து அவா் ராஜபாளையம் தெற்கு காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் உதவி ஆய்வாளா் முத்துக்குமரன் வழக்குப்பதிந்து லட்சுமியை பிடித்து விசாரித்ததில் இவற்றை அவா் திருடியது தெரியவந்தது. மேலும் அவா் தங்கக் காசுகளை உருக்கி, கட்டியாக வைத்திருந்தது தெரியவந்தது.
இதையடுத்து அவரது வீட்டில் மறைத்து வைத்திருந்த 50 கிராம் தங்கம், ரூ. 35 ஆயிரம் ஆகியவற்றை போலீஸாா் பறிமுதல் செய்து லட்சுமியை கைது செய்து விசாரிக்கின்றனா்.