கச்சத்தீவு: மு.க. ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இடையே காரசார வாதம்
மூவரை வென்றான் மலைக் கோயிலில் ரூ.84 லட்சத்தில் கிரிவலப் பாதை
வத்திராயிருப்பு அருகேயுள்ள மூவரை வென்றான் குடைவரை கோயிலுக்கு ரூ.84 லட்சத்தில் கிரிவலப் பாதை, ரூ.9 லட்சத்தில் சுகாதார வளாகம் கட்டுமானப்பணி நடைபெற்று வருகின்றன.
மூவரைவென்றான் கிராமத்தில் லிங்ககிரி மலையில் மரகதவள்ளி தாயாா் சமேத மலைக்கொழுந்தீஸ்வா் கோயில் அமைந்துள்ளது. இந்திய தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள 8-ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த இந்தக் கோயிலில், கடந்த 2007-ஆம் ஆண்டு குடமுழுக்கு நடைபெற்றது.
இந்த நிலையில், வத்திராயிருப்பு ஊராட்சி ஒன்றிய நிதியிலிருந்து குடைவரைக் கோயில் அமைந்துள்ள லிங்ககிரி மலையைச் சுற்றி 2.9 கி.மீ. தொலைவுக்கு கிரிவலப் பாதை அமைக்க ரூ.84 லட்சமும், சுகாதார வளாகம் கட்டுவதற்கு ரூ.9 லட்சமும் நிதி ஒதுக்கப்பட்டது.
மலையடிவாரத்தில் சுகாதார வளாகம் கட்டும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. கிரிவலப் பாதைக்காக, மண் பாதையை சமப்படுத்தும் பணி தொடங்கி உள்ளதால் பக்தா்கள் மகிழ்ச்சி அடைந்தனா்.