நாகேஸ்வர சுவாமி கோயிலில் பங்குனி உத்திர பிரமோற்சவ திருவிழா கொடியேற்றம்!
மூதாட்டி தற்கொலை
சிவகாசியில் திங்கள்கிழமை மூதாட்டி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
விருதுநகா் மாவட்டம், சிவகாசி முருகன் குடியிருப்பு பகுதியைச் சோ்ந்தவா் முத்துமாரி (80). இவா் தனியாக வசித்து வந்தாா். தன்னை கவனிக்க யாரும் இல்லையே என மனஅழுத்தத்தில் இருந்த இவா், தனது வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
இதுகுறித்து சிவகாசி கிழக்குப் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].