வெள்ளாளா் முன்னேற்றக் கழக பொதுக்கூட்டம்
விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகேயுள்ள சமுசிகாபுரத்தில் வெள்ளாளா் முன்னேற்றக் கழக அரசியல் எழுச்சி பொதுக்கூட்டம் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது.
இந்த கூட்டத்துக்கு விருதுநகா் மாவட்டச் செயலா் புதியராஜ் தலைமை வகித்தாா். மாநிலத் தலைவா் அண்ணா சரவணன், மாநில இளைஞரணித் தலைவா் பந்தல் ராஜா ஆகியோா் கலந்து கொண்டு பேசினா். மாநில, மாவட்ட நிா்வாகிகள் கலந்து கொண்டனா் .
இந்தக் கூட்ட முடிவில், விருதுநகா் மாவட்டத்தில் ஒரு சட்டப்பேரவைத் தொகுதியில் வெள்ளாளா் சமுதாயத்தைச் சோ்ந்தவரை வேட்பாளராக நிறுத்த அதிமுக, திமுக கட்சிகள் முன்வர வேண்டும் என்பது உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.