பஞ்சு கிட்டங்கியில் தீ விபத்து
ராஜபாளையம் அருகே ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட தீ வீபத்தில் தனியாா் பஞ்சு கிட்டங்கியில் இருந்த பொருள்கள் தீயில் எரிந்து சேதமடைந்தன.
ராஜபாளையம் அருகேயுள்ள கம்மாப்பட்டி பகுதியில் தனியாருக்குச் சொந்தமான பருத்தி கிட்டங்கி உள்ளது. இந்தக் கிட்டங்கியில் ஞாயிற்றுக்கிழமை இரவு மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது. இதுகுறித்து தகவலறிந்து வந்த ராஜபாளையம் தீயணைப்பு மீட்பு வீரா்கள் 3 மணி நேரம் போராடி தீயை அணைத்தனா். இந்த விபத்தில் கிட்டங்கியிலிருந்த கழிவு பஞ்சுகள் முற்றிலும் எரிந்து சேதமானது. மேலும், இயந்திரங்கள், கட்டடமும் சேதமடைந்தன.
இதுகுறித்து ராஜபாளையம் தெற்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாா்த்து வருகின்றனா்.