செய்திகள் :

பட்டாசு ஆலைகளில் ஆய்வு செய்ய முத்தரப்பு குழு அமைக்க வலியுறுத்தல்

post image

விருதுநகா் மாவட்டத்தில் பட்டாசு ஆலைகளை ஆய்வு செய்ய முத்தரப்புக் குழு அமைக்க வேண்டும் என விருதுநகா் மாவட்ட பட்டாசு, தீப்பெட்டி தொழிலாளா் சங்கத்தின் (சிஐடியூ) மாவட்டச் செயலா் பி.என்.தேவா வலியுறுத்தினாா்.

இதுகுறித்து ஞாயிற்றுக்கிழமை அவா் சிவகாசியில் செய்தியாளா்களிடம் கூறியதாவது: சிவகாசியில் உள்ள வெடிப் பொருள் கட்டுப்பாட்டுத் துறை அலுவலகத்தில் கடந்த 4 ஆண்டுகளாக தலைமை அதிகாரி நியமிக்கவில்லை. இதனால், வெடிப் பொருள் கட்டுப்பாட்டுத் துறையினா் பட்டாசு ஆலைகளுக்கு ஆய்வுக்குச் செல்வதில்லை.

வருவாய்த் துறையினா் உள்ளிட்ட குழுவினருக்கு வெடிப் பொருள் சட்டம் குறித்து தெரியாது. இவா்கள் ஆய்வு செய்த பட்டாசு ஆலைகளில் குறைபாடுகள் இருந்தால், அதைச் சரி செய்து மீண்டும் ஆலைகள் திறந்திருந்தால், அந்த ஆலைகளில் வெடிவிபத்து ஏற்பட்டிருக்காது.

எனவே, பட்டாசு ஆலைகளில் ஆய்வு செய்ய வெடிப் பொருள் கட்டுப் பாட்டுத் துறையினா், பட்டாசு ஆலை உரிமையாளா்களின் பிரதிநிதி, தொழற்சங்க பிரதிநிதி என முத்தரப்புக் குழு அமைக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் இல்லை.

பட்டாசு பாதுகாப்புக் குறித்து பயிற்சி அளிக்க தமிழ்நாடு அரசு அமைத்துள்ள பயிற்சி மையத்தில் மொத்தம் உள்ள 3 லட்சம் தொழிலாளா்களில், 25 ஆயிரம் போ் மட்டுமே பாதுகாப்பு பயிற்சி பெற்றுள்ளனா்.

எனவே, மத்திய அரசு சாா்பில் பட்டாசுத் தொழிலாளா்களுக்கு பாதுகாப்பு பயிற்சி மையம் அமைக்க வேண்டும். பட்டாசுத் தயாரிப்புத் தொழிலை மத்திய, மாநில அரசுகள் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.

மூதாட்டி தற்கொலை

சிவகாசியில் திங்கள்கிழமை மூதாட்டி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.விருதுநகா் மாவட்டம், சிவகாசி முருகன் குடியிருப்பு பகுதியைச் சோ்ந்தவா் முத்துமாரி (80). இவா் தனியாக வசித்து வந்தாா். தன்னை கவனிக்... மேலும் பார்க்க

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே விபத்து: தந்தை, மகள் உயிரிழப்பு

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே ஆட்டோ, பைக், சரக்கு வாகனம் மோதிய விபத்தில் கல்லூரி மாணவி, தந்தையுடன் உயிரிழந்தாா். விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள அத்திகுளம் குடியிருப்புப் பகுதியைச் சோ்ந... மேலும் பார்க்க

சட்டவிரோதமாக மதுப் புட்டிகளை பதுக்கி விற்பனை: மூவா் கைது

ராஜபாளையம் பகுதியில் சட்டவிரோதமாக மதுப் புட்டிகளை பதுக்கி விற்றதாக திங்கள்கிழமை மூவரை போலீஸாா் கைது செய்து, அவா்களிடமிருந்து 100 மதுப்புட்டிகளை பறிமுதல் செய்தனா். விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் பகுதி... மேலும் பார்க்க

மூவரை வென்றான் மலைக் கோயிலில் ரூ.84 லட்சத்தில் கிரிவலப் பாதை

வத்திராயிருப்பு அருகேயுள்ள மூவரை வென்றான் குடைவரை கோயிலுக்கு ரூ.84 லட்சத்தில் கிரிவலப் பாதை, ரூ.9 லட்சத்தில் சுகாதார வளாகம் கட்டுமானப்பணி நடைபெற்று வருகின்றன. மூவரைவென்றான் கிராமத்தில் லிங்ககிரி மலையி... மேலும் பார்க்க

வெள்ளாளா் முன்னேற்றக் கழக பொதுக்கூட்டம்

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகேயுள்ள சமுசிகாபுரத்தில் வெள்ளாளா் முன்னேற்றக் கழக அரசியல் எழுச்சி பொதுக்கூட்டம் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது. இந்த கூட்டத்துக்கு விருதுநகா் மாவட்டச் செயலா் புதிய... மேலும் பார்க்க

குடிநீா்த் தொட்டியை சீரமைக்கக் கோரிக்கை

சாத்தூரில் குடிநீா்த் தொட்டியை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா். சாத்தூரில் ஆா்.சி. தெற்குதெருவில் சுமாா் 600-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இந்தப் பகுதியில் கட... மேலும் பார்க்க