``RSS இந்தியாவின் கலாசார ஆலமரம்'' - ஆர்.எஸ்.எஸ் தலைமையகத்தில் பிரதமர் நரேந்திர ம...
ஒரே நாளில் குடும்பத்துடன் ஊட்டியை சுற்றிப் பார்க்க இவ்வளவு இடங்கள் இருக்கிறதா? பட்ஜெட் ஸ்பாட்ஸ்!
நீலகிரி மாவட்டத்தில் இருக்கும் ஓர் அழகான சுற்றுலா மலைவாசஸ்தல நகரம்தான் ஊட்டி.
இங்கு கொட்டும் அருவிகள், அமைதியான ஏரிகள், அடர்ந்த காடுகள் மற்றும் தேயிலைத் தோட்டங்கள் என சுற்றுலா பயணிகளை பிரமிக்க வைக்க பல இடங்கள் உள்ளன.
ஊட்டி அதன் இனிமையான காலநிலை மற்றும் இயற்கை அழகு நகர சலசலப்பில் இருந்து விலகி செல்ல ஒரு சிறந்த இடமாக உள்ளது. அப்படி ஊட்டியில் ஒரே நாளில் குடும்பத்துடன் பார்வையிட இருக்கும் இடங்கள் குறித்து தெரிந்து கொள்ளலாம்

தாவரவியல் பூங்கா
650 க்கும் மேற்பட்ட தாவர இனங்கள் மற்றும் மரங்களுக்கு தாயகமாக இருக்கும் அரசு தாவரவியல் பூங்கா நிச்சயம் அனைவரும் பார்க்க வேண்டிய இடமாகும். உங்கள் இனிமையான காலையை தாவரவியல் பூங்காவுடன் தொடங்கி அங்கு இருக்கும் அமைதியான தோட்டத்தை பார்வையிடலாம்.
ஊட்டி ஏரி
பூங்காவை பார்வையிட்ட பிறகு படகு சவாரி வசதி உள்ள அழகிய ஏரியான ஊட்டி ஏரிக்கு செல்லுங்கள். இங்கு மிதமாக, படகு சவாரி செய்து அங்கு இருக்கும் இயற்கை வளங்களை சுற்றிப் பார்த்து அனுபவியுங்கள்.

தொட்டபெட்டா சிகரம்
அடுத்ததாவது ஊட்டியின் மிக உயரமான இடமான தொட்டபெட்டா சிகரத்திற்கு செல்லுங்கள். இது சுற்றியுள்ள நிலப்பரப்பின் காட்சியை வழங்குவதுடன் உங்களுக்கு தனித்துவமான அனுபவத்தையும் வழங்குகிறது. நீலகிரி எப்படி இருக்கிறது என்பதை மலையிலிருந்து நீங்கள் காணலாம்..
தேயிலை தோட்டம்
ஊட்டியின் சிக்னேச்சர் இடம்தான் இந்த தேயிலை தோட்டம். ஊட்டியில் இருக்கும் தேயிலை அருங்காட்சியத்தை நீங்கள் பார்வையிடலாம். இங்கு தேநீர் தயாரிக்கும் செயல்முறை காட்சிப்படுத்தப்படுகிறது, அதன் பின்னர் தேநீர் வாங்கி சுவைக்கலாம்.

ரோஜா தோட்டம்
மாலையில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வகையான ரோஜாக்களை கொண்ட ரோஜா தோட்டத்தை பார்வையிடலாம். இந்த தோட்டம் ஓய்வு எடுக்கவும் ,இயற்கையான காட்சிகளை ரசிக்கவும் ஒரு அழகான இடமாக உங்களுக்கு அமையும்.
சேரிங் கிராஸ்
ஊட்டியில் உள்ள பிரபலமான ஷாப்பிங் இடமான சேரிங்க் கிராஸ் சென்று உங்களது நாளை முடிக்கலாம். இங்கு நீங்கள் ஊட்டி வந்ததன் நினைவாக சில பொருள்களை வாங்கிச் செல்லலாம், இங்கிருக்கும் உணவுகளையும் நீங்கள் சுவைத்து விட்டு செல்லலாம். அப்புறம் என்ன ஊட்டிக்கு ஒரு நாள் செல்ல தயாரா?