செய்திகள் :

கோடைகாலத்திலும் கிறிஸ்மஸ் கொண்டாடும் நகரம் பற்றி தெரியுமா? - ஏன் நிச்சயம் பார்க்க வேண்டும்?

post image

கிறிஸ்மஸ் என்றவுடன் டிசம்பர் மாதம் தான் நினைவிற்கு வரும், அந்த மாதம் முழுக்க கொண்டாட்டங்கள் இருக்கும் என்பது பலரும் அறிந்ததே.

ஆனால் ஒரு சிறிய நகரத்தில் வருஷத்தில் 364 நாட்களும் கிறிஸ்மஸ் கொண்டாடப்படுகிறது. படிக்கவே ஆச்சரியமாக உள்ளதா? ஆம் அலாஸ்காவின் வடதுருவ நகரத்தில் தான் இவ்வாறு கொண்டாடப்படுகிறது.

வட துருவம் என்பது அமெரிக்காவின் அலாஸ்காவில் உள்ள ஒரு சிறிய நகரமாகும். 2020 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, நகரத்தின் மக்கள் தொகை 2,243 ஆக இருந்தது. இங்குதான் வருஷம் முழுக்க கிறிஸ்மஸ் கொண்டாடப்படுகிறது.

கிறிஸ்துமஸ் தீம் நகரம்

கிறிஸ்மஸ் ட்ரீங்கள் டிரைவ் என பெயரிடப்பட்ட தெருக்கள் முதல் மிட்டாய் கேன்கள் போன்ற வடிவிலான விளக்கு கம்பங்கள் வரை நகரமே கிறிஸ்துமஸ் தீமில் அலங்கரிக்கப்பட்டிருக்குமாம்.

இந்த நகரத்தின் பிரபலமான இடமே சாண்டா கிளாஸ் ஹவுஸ்தான்.

ஆண்டின் எந்த நேரத்திலும் சாண்டா கிளாஸ்சை நீங்கள் சந்திக்கலாம். 40 அடி உயரமான பிரம்மாண்டமான சாண்டா சிலை நகரத்தில் வைக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் கிறிஸ்துமஸுக்கு முன்பு வட துருவத்தில் உள்ள தபால் அலுவலகத்திற்கு, சாண்டா கிளாஸுக்கு லட்சக்கணக்கான கடிதங்கள் வருகின்றன. ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் கிறிஸ்துமஸ் வாழ்த்துகளை தெரிவிக்கின்றனர்.

கோடைகாலத்திலும் கூட மின்னும் விளக்குகள் அலங்கரிக்கப்பட்ட மரங்கள், சாண்டா கிளாஸ் சுற்றி திரிவதை நீங்கள் காணலாம்.

வித்தியாசமான பயணங்களை விரும்பினால் இந்த நகரத்திற்கு சென்று அங்கு இருக்கும் அற்புதமான விஷயங்களை நீங்கள் பார்வையிட்டு தனித்துவமான அனுபவத்தை பெறலாம். இந்த கோடையின் நடுவில் சாண்டாவை சந்திக்க நீங்கள் தயாரா?

மியான்மார் நிலநடுக்கம் எதிரொலி; தாய்லாந்து பயணம் பாதுகாப்பானதா? வெளியுறவுத் துறை சொல்வது என்ன?

மியான்மாரில் ஏற்பட்ட 7.7 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, 6 பகுதிகளைப் பேரிடர் பகுதி என்று ராணுவ அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த நிலநடுக்கம் தாய்லாந்து நாட்டிலும் உணரப்பட்டதாக ... மேலும் பார்க்க

ஒரே நாளில் குடும்பத்துடன் ஊட்டியை சுற்றிப் பார்க்க இவ்வளவு இடங்கள் இருக்கிறதா? பட்ஜெட் ஸ்பாட்ஸ்!

நீலகிரி மாவட்டத்தில் இருக்கும் ஓர் அழகான சுற்றுலா மலைவாசஸ்தல நகரம்தான் ஊட்டி.இங்கு கொட்டும் அருவிகள், அமைதியான ஏரிகள், அடர்ந்த காடுகள் மற்றும் தேயிலைத் தோட்டங்கள் என சுற்றுலா பயணிகளை பிரமிக்க வைக்க பல... மேலும் பார்க்க

வழிநெடுக அழகியல்! - தேசிய நெடுஞ்சாலை 85 பற்றித் தெரியுமா? | My Vikatan

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

இந்தியர்களை ஒன்றிணைத்த ரயில்கள்; மகாத்மா காந்தியின் அனுபவம் என்ன? | My Vikatan

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

சென்னையில் இப்படி ஓர் இடமா! - Weekend- ஐ என்ஜாய் செய்ய சூப்பர் spot!

சென்னையின் அடையாறில் உள்ள தியாசாபிகல் சொசைட்டி, நகரத்தின் போக்குவரத்து, சலசலப்பு மற்றும் பரபரப்பான தெருக்களில் இருந்து சற்று விலகி செல்ல விரும்புவோருக்கு ஒரு சிறந்த இடமாக இருக்கிறது. இது 1875 ஆம் ஆண்ட... மேலும் பார்க்க

கொடைக்கானலில் `குணா குகை' தெரியும்; இது என்ன `குக்கல் குகை' - மிஸ் செய்யக்கூடாத சூப்பர் ஸ்பாட்!

கொடைக்கானலில் பிரபலமாக இருக்கும் குணா குகை பற்றி தான் எல்லோரும் கேள்விப்பட்டிருப்போம், ஆனால் இங்கு கொடைக்கானலில் இருந்து 40 கி.மீ தூரத்தில் இருக்கும் குக்கல் குகைகள் பற்றி தெரிந்துக்கொள்ள போகிறோம். தெ... மேலும் பார்க்க