சென்னையில் இப்படி ஓர் இடமா! - Weekend- ஐ என்ஜாய் செய்ய சூப்பர் spot!
சென்னையின் அடையாறில் உள்ள தியாசாபிகல் சொசைட்டி, நகரத்தின் போக்குவரத்து, சலசலப்பு மற்றும் பரபரப்பான தெருக்களில் இருந்து சற்று விலகி செல்ல விரும்புவோருக்கு ஒரு சிறந்த இடமாக இருக்கிறது.
இது 1875 ஆம் ஆண்டு ஹெலினா பெட்ரோவ்னா பிளாவட்ஸ்கி, ஹென்றி ஸ்டீல் ஓல்காட் மற்றும் வில்லியம் குவான் ஜட்ஜ் ஆகியோரால் நிறுவப்பட்டது. தியோசாபி என்ற சொல் தெய்வீக ஞானம் என்று பொருள்படும் கிரேக்க வார்த்தைகளிலிருந்து வந்ததாக கூறப்படுகிறது.

ஏன் இந்த இடத்தை நிச்சயம் பார்க்க வேண்டும்?
250 ஹெக்டேர் பரப்பளவில் பரந்து விரிந்து இருக்கும் தியாசாபிகல் சொசைட்டி, ஒரு மசூதி, ஒரு தேவாலயம், ஒரு கோயில் மற்றும் ஒரு புத்த ஆலயம் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.
இதுமட்டுமல்லாமல் மதம் மற்றும் தத்துவம் பற்றிய புத்தகங்களைக் கொண்ட ஒரு பெரிய நூலகமும் இங்கு உள்ளது. புத்தகங்கள் வாங்கும் ஆர்வம் இருந்தால் இங்கு வரலாம்.
இந்த இடம் பல வகையான மரங்களையும் தாவரங்களையும் கொண்டுள்ளது. தோட்டத்தின் சிறப்பம்சமே 450 ஆண்டுகள் பழமையான ஆலமரம் தான். இது இன்னும் இயற்கை ஆர்வலர்களை ஈர்க்கிறது. அமைதியான சூழலில் ஓய்வெடுக்க விரும்புவோருக்கு இது சிறந்த இடம் என்றே சொல்லலாம்.
திங்கள் முதல் சனி வரை காலை 8.45 மணி முதல் காலை 10 மணி வரை, பிற்பகல் 2 மணி முதல் மாலை 4 மணி வரை பார்வையாளர்கள் இந்த இடத்தை அணுகலாம்.