திருச்சி பஞ்சப்பூர் பேருந்து முனையம்: திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்!
திருச்சி பஞ்சப்பூரில் பல்வேறு வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ள பேருந்து முனையத்தை பொதுமக்கள் பயன்பாட்டுக்காகத் திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்!
திருச்சியில் இரண்டு நாள்கள் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் வகையில் நேற்று திருச்சி வந்திருந்த தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், திருச்சி மாவட்டம் பஞ்சப்பூரில் அமைக்கப்பட்டுள்ள புதிய பேருந்து முனையத்தை இன்று காலை திறந்து வைத்தார்.
மேலும், அங்கு நிறுவப்பட்டுள்ள பெரியாா் சிலையையும் திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து ஒருங்கிணைந்த காய்கறி சந்தைக்கும் அடிக்கல் நாட்டவுள்ளாா். இதுபோன்று பல்வேறு நிகழ்ச்சிகளில் இன்று அவர் பங்கேற்கவிருக்கிறார்.