செய்திகள் :

கண்ணுக்கு கண் என்பது மொத்த உலகத்தையும் குருடாக்கும்: அம்பத்தி ராயுடு

post image

இந்தியா, பாகிஸ்தான் போர் குறித்து முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் அம்பத்தி ராயுடு கூறியதை கவனம் ஈர்த்துள்ளது.

இந்தியா - பாகிஸ்தான் எல்லைப் பகுதியில், பாகிஸ்தான் நடத்தி வரும் தாக்குதலையடுத்து இந்தியாவும் பதிலடி கொடுத்து வருகிறது.

நேற்றிரவு தர்மசாலாவில் நடைபெற்ற ஐபிஎல் போட்டி பாதியிலேயே நிறுத்தப்பட்டது. பின்னர் ரசிகர்கள் வெளியேற்றப்பட்டனர்.

கிரிக்கெட் வீரர்கள், தொழில்நுட்ப குழிவினர்கள் பாதுகாப்பாக விடுதியில் தங்கவைக்கப்பட்டுள்ளார்கள். இவர்களை சிறப்பு வந்தே பாரத் ரயில் மூலம் தில்லிக்கு பாதுகாப்பாக அழைத்துவர பிசிசிஐ முடிவு செய்துள்ளது.

இந்நிலையில் முன்னாள் வீரர் அம்பத்தி ராயுடு கூறியதாவது:

கண்ணுக்கு கண் என்பது மொத்த உலகத்தையும் குருடாக்கிவிடும். இது கோழைத்தனம் என்பதல்ல, ஞானம் என்பதை தெரிந்துகொள்ளுங்கள்.

நீதி நிலைநாட்டப்படும், ஆனால் மனிதாபிமானத்தை இழந்துவிடக்கூடாது. கருணையை நமது இதயத்தில் வைத்தும் நமது நாட்டை தீவிரமாக நேசிக்கலாம்.

நாட்டுப் பற்றும் அமைதியும் கைகள் பிடித்து நடக்கலாம் எனக் கூறினார்.

ஆதரவும் எதிர்ப்பும் வந்தபிறகு மற்றொரு பதிவினை அம்பத்தி ராயுடு பதிவிட்டார். அதில் அவர் கூறியதாவது:

இந்தமாதிரி நேரத்தில் நாம் ஒற்றுமையாக பயமில்லாமல் உறுதியாக இருக்க வேண்டும். இந்திய ராணுவத்துக்கு மிகப்பெரிய நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

ஒப்பிடமுடியாத தைரியம், சுயநலமில்லாமல் நாட்டிற்க்காக தியாகம் செய்யும் ராணுவத்தினரின் செயல்கள் கவனம்பெறாமல் செல்லாது. உங்களது தைரியம்தான் நமது மூவண்ண கொடியை உயர பறக்கவும் எல்லையைப் பாதுகாக்கவும் உதவுகிறது. நாளை அமைதி நிலவ உங்களது சேவை தொடரட்டும். ஜெய்ஹிந்த் எனக் கூறியுள்ளார்.

இந்தப் பதிவுக்கு மிகுந்த வரவேற்பு கிடைத்து வருகிறது.

அம்பத்திராயுடுவின் பதிவு.

24 விமான நிலையங்களை மே 14 ஆம் தேதி வரை மூட உத்தரவு!

இந்தியா - பாகிஸ்தான் இடையே நிலவும் போர்ப் பதற்றம் காரணமாக 24 விமான நிலையங்களை மே 14 ஆம் தேதி வரை மூட மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.ஆபரேஷன் சிந்தூர் மற்றும் பாகிஸ்தான் ராணுவத்தின் ட்ரோன் தாக்குத... மேலும் பார்க்க

ஜனநாயகத்தில் பயங்கரவாதத்திற்கு இடமில்லை: ஆந்திர முதல்வர்

ஜனநாயகத்தில் பயங்கரவாதத்திற்கு இடமில்லை என்று ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார். அனந்தபூர் மாவட்டத்தில் உள்ள வஜ்ரகரூர் கிராமத்தில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய அவர், சமீபத்த... மேலும் பார்க்க

குஜராத்தில் மே 15 வரை பட்டாசுகள், ட்ரோன்களுக்கு தடை

குஜராத்தில் மே 15 வரை அனைத்து நிகழ்வுகளிலும் பட்டாசுகள், ட்ரோன்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து குஜராத் மாநில உள்துறை அமைச்சர் ஹர்ஷ் சங்கவி வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், இந்த மாதம் 15 ஆ... மேலும் பார்க்க

மேகாலயா மாநிலத்தில் இரவு நேர ஊரடங்கு பிறப்பிப்பு!

வட மேற்கு எல்லையில் பதற்றமான சூழல் நிலவுவதால், வங்கதேச எல்லையான மேகாலயா மாநிலத்தில் 2 மாதங்களுக்கு இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.சர்வதேச எல்லையில் இருந்து பூஜ்ஜியக் கோட்டிலிருந்து 1 கிலோ மீட... மேலும் பார்க்க

மதவாத பிரச்னைகளை ஏற்படுத்த பாகிஸ்தான் முயற்சி! - விக்ரம் மிஸ்ரி

பாகிஸ்தானுக்கு இந்தியா சரியான பதிலடி கொடுத்திருக்கிறது மத்திய வெளியுறவுத்துறை செயலர் விக்ரம் மிஸ்ரி தெரிவித்தார்.இந்தியா - பாகிஸ்தான் இடையே போர்ப் பதற்றம் உச்சம் பெற்ற நிலையில், நேற்றிரவு பாகிஸ்தான் ர... மேலும் பார்க்க

இந்திய ராணுவ நிலைகளை தாக்க பாகிஸ்தான் முயற்சி: கர்னல் சோஃபியா குரேஷி

புது தில்லி: இந்திய நாட்டின் ராணுவ நிலைகளைக் குறிவைத்து தாக்குவதற்கு பாகிஸ்தான் ராணுவம் முயற்சி செய்து வருவதாக கர்னல் சோஃபியா குரேஷி விளக்கம் கொடுத்துள்ளார்.போர்ப் பதற்றம் குறித்து விங் கமாண்டர் வியோம... மேலும் பார்க்க