இந்தியா - பாகிஸ்தான் இடையேயான பதற்றத்துக்கு மத்தியில் பங்குச் சந்தைகள் சரிந்து ம...
ஜம்மு, உதம்பூரில் இருந்து சிறப்பு ரயில் அறிவிப்பு!
ஜம்மு, உதம்பூரில் இருந்து சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று இந்திய ரயில்வே அறிவித்துள்ளது.
ஜம்மு - காஷ்மீர் உள்பட பல்வேறு மாநிலங்களின் எல்லையோர மாவட்டங்களில் உச்சகட்டப் போர்ச் சூழல் நிலவி வரும் நிலையில், கல்வி நிறுவனங்கள், கடைகள் மூடப்பட்டு அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானிடம் இருந்து தாக்குதல் அச்சுறுத்தல் இருக்கும் நிலையில், மின்சாரம் துண்டிக்கப்பட்டு மக்கள் வீட்டைவிட்டு வெளியேற வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில், ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் சிக்கித் தவிக்கும் பிற மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் சொந்த ஊர்களுக்கு திரும்புவதற்கு வசதியாக சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று இந்திய ரயில்வே அறிவித்துள்ளது.
ஜம்மு, உதம்பூரில் இருந்து தில்லிக்கு மூன்று சிறப்பு ரயில்களை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
ஜம்முவில் இருந்து இன்று காலை 10.45 மணிக்கு சிறப்பு ரயில் எண் 04612 மணிக்கு புறப்பட்டுள்ள நிலையில், உதம்பூரில் இருந்து பகல் 12.45 மணியளவில் சிறப்பு வந்தே பாரத் ரயில் இயக்கப்படவுள்ளது.
மேலும், இரவு 7 மணிக்கு ஜம்முவில் இருந்து 22 முன்பதிவுப் பெட்டிகள் கொண்ட சிறப்பு ரயில் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.