``RSS இந்தியாவின் கலாசார ஆலமரம்'' - ஆர்.எஸ்.எஸ் தலைமையகத்தில் பிரதமர் நரேந்திர ம...
பஞ்சாப் போராட்டம்: 5 மாத உண்ணாவிரதப் போராட்டத்தைக் கைவிட்ட விவசாயி!
ஹரியாணா எல்லையில் பஞ்சாப் விவசாயிகளை தடுப்பதற்காக அமைக்கப்பட்ட தடுப்புகளை பஞ்சாப் அரசு அகற்றியது.
குறைந்தபட்ச ஆதரவு விலை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பஞ்சாப் விவசாயிகள், கடந்தாண்டு பிப்ரவரியில் போராட்டத்தைத் தொடங்கினர். மேலும், தில்லியை நோக்கி பேரணியாகச் செல்லவும் முடிவெடுத்தனர்.
இதனிடையே, தில்லியை நோக்கிச் செல்லும் விவசாயிகளைத் தடுப்பதற்காக ஷம்பு - கானோரி தேசிய நெடுஞ்சாலையில் காவல்துறையினர் தடுப்புகள் அமைத்து, போராட்டக்காரர்களை தடுத்து நிறுத்தி வைத்தனர்.
இருப்பினும், தடுத்து நிறுத்தப்பட்ட இடத்திலேயே போராட்டக்காரர்கள் முகாமிட்டு, போராட்டத்தில் ஈடுபட்டனர். அதுமட்டுமின்றி, போராட்டக்காரர்களின் மூத்தத் தலைவர் ஜக்ஜித் சிங் டல்லேவால், கடந்த நவம்பர் மாதம்முதல் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் இருப்பதாகவும் கூறினார்.
ஆனால், உண்ணாவிரதம் இருந்த ஜக்ஜித்தின் உடல்நிலை மோசமானதால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்த நிலையில், ஓராண்டு காலமாக அமைக்கப்பட்ட தடுப்புகள், வெள்ளிக்கிழமை நீக்கப்பட்டதாக பஞ்சாப் அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. மேலும், உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருந்த ஜக்ஜித்தும் தண்ணீர் அருந்தி, போராட்டத்தைக் கைவிட்டதாகவும் கூறியது.
மேலும், ``ஜக்ஜித், எந்தவொரு அரசியல் பின்புலமும் இல்லாத ஓர் உண்மையான விவசாயத் தலைவர்’’ என்று நீதிமன்றம் பாராட்டு தெரிவித்தது.
இதையும் படிக்க:இந்தியாவிலேயே மிகவும் பிடித்தது சேப்பாக்கம் திடல்தான்: தோனி