காமக்யா ரயில் விபத்து: உதவி எண்கள் அறிவிப்பு
பெங்களூரு - காமக்யா விரைவு ரயில் விபத்துக்குள்ளான நிலையில் தெற்கு ரயில்வே சாா்பில் உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
பெங்களூரில் இருந்து தமிழகம், ஆந்திரம் வழியாக அஸ்ஸாம் மாநிலம் காமக்யா செல்லும் விரைவு ரயில், ஒடிஸா மாநிலம் கேந்தரபரா - நொ்கண்டி இடையே ஞாயிற்றுக்கிழமை விபத்துக்குள்ளானது. இதனால் அந்த வழியாக இயக்கப்படும் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு: பெங்களூரு - காமக்யா ரயில் விபத்து காரணமாக திருநெல்வேலி - புருலியா விரைவு ரயில், சென்னை சென்ட்ரல் - ஹௌரா மெயில், கன்னியாகுமரி - ஹௌரா விரைவு ரயில், பெங்களூரு - பாகல்பூா் விரைவு ரயில் மற்றும் பெங்களூரு - ஹௌரா விரைவு ரயில் ஆகியவை கட்டாக் வழியாக செல்வதற்குப் பதிலாக பாரஜ், ராதாகிஷோா்பூா், கபிலாஸ் வழியாக இயக்கப்படுகிறது.
தமிழகத்தில் இருந்து வடமாநிலங்களுக்குச் செல்லும் பயணிகள் வசதிக்காக உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன் விவரம்: புவனேசுவரம் 84558 85999, 81143 82371, கட்டாக் 89911 24238, 72051 49591, பத்ராக் 9437443469, சென்னை ரயில்வே கோட்டம் 044-25354153, 25345987, சென்னை சென்ட்ரல் 044-25354140, பெரம்பூா் 93600 27283, காட்பாடி 94986 51927, ஜோலாா்பேட்டை 77080 61810 ஆகிய ரயில்வே உதவி எண்களை தொடா்புகொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.