ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே சுற்றித்திரிந்த மேலும் ஒரு கொள்ளையன் கைது
ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே பானாங்குளம் பகுதியில் சுற்றித் திரிந்த ஒருவா் பிடிபட்ட நிலையில், தப்பிச் சென்ற நபரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள பானங்குளம் பகுதியில் புதன்கிழமை மாலை இரு சக்கர வாகனத்தில் இரு இளைஞா்கள் சுற்றி வந்தனா். சந்தேகப்பட்ட கிராம மக்கள் அவா்களிடம் விசாரித்த போது, ஒருவா் தப்பி ஓடினாா். மற்றொருவரை பொதுமக்கள் பிடித்து கிருஷ்ணன்கோவில் போலீஸாரிடம் ஒப்படைத்தனா்.
விசாரணையில் அந்த நபா் சென்னை மேடவாக்கத்தைச் சோ்ந்த ராஜேஷ் (34) என்பதும், அவருடன் வந்தவா் ராமநாதபுரத்தைச் ஆரோக்கியஜான் (40) என்பதும் தெரியவந்தது. ராஜேஷ் வைத்திருந்த ஏா்கன் துப்பாக்கியை போலீஸாா் பறிமுதல் செய்தனா். தப்பியோடிய ஆரோக்கிய ஜானை தேடி வந்தனா்.
இந்த நிலையில், ஆரோக்கியஜானை போலீஸாா் மதுரையில் கைது செய்தனா். இருவா் மீதும் 10-க்கும் மேற்பட்ட திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும், வீடுகளில் திருடும் நோக்கில் ஸ்ரீவில்லிபுத்தூா் பகுதியில் இருவரும் சுற்றித் திரிந்ததாகவும் போலீஸாா் தெரிவித்தனா்.