செய்திகள் :

எதிரணியில் விராட் கோலி இருந்தால் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது! -ருதுராஜ்

post image

பெங்களூரு அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி எதிரணியில் இருந்தால் அந்தப் போட்டி ரசிகர்களால் எப்போதும் எதிர்பார்க்கப்படும் என்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் தெரிவித்துள்ளார்.

18-வது ஐபிஎல் தொடரின் 8-வது போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன.

கடந்தாண்டு கட்டாயம் வென்றாக வேண்டிய போட்டியில் சென்னை அணி தோற்று சில புள்ளிகள் வித்தியாசத்தில் வெளியேறியதால் அதற்கு பதிலடி கொடுக்கும் முனைப்பில் இருக்கிறது. அதே வேளையில் ஆர்சிபி அணி சென்னையில் வென்று 17 ஆண்டுகள் ஆவதாலும், இரு அணிகளிலும் அதிரடி வீரர்கள் வரிந்துக் கட்டிக்கொண்டு இருப்பதால் இந்தப் போட்டியில் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இரு அணிகளும் முதல் போட்டியில் அபார வெற்றி பெற்றதால் இரண்டாவது வெற்றியைப் பெறுவது யார் என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்திருக்கிறது. முதல் போட்டியில் விராட் கோலி, பில் சால்ட், சென்னைக்கு கெய்க்வாட், ரச்சின் ரவீந்திரா ஆகியோர் அரைசதம் விளாசியிருந்தனர்.

இதுபற்றி செய்தியாளர் சந்திப்பில் சென்னை அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் கூறுகையில், “நாட்டுக்காகவும், பெங்களூரு அணிக்காகவும் தொடர்ந்து சிறப்பாக விளையாடி வரும் விராட் கோலி, எதிரணியில் இருந்தால் அந்தப் போட்டி ரசிகர்களால் எப்போதும் எதிர்பார்க்கப்படும் ஒரு மோதலாகவே இருக்கும்.

இரு அணிகளுக்கு இடையிலான போட்டியில் எதோ தனித்துவம் இருக்கிறது. ஆர்சிபி அணி வலுவாக இருக்கிறது. மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான போட்டியைப் போலவே இந்தப் போட்டியிலும் பரபரப்புக்குப் பஞ்சமிருக்காது. ரசிகர்கள் தவிர்க்கக்கூடாதப் போட்டியாக இருக்கும்.

ரஜத் படிதார் தலைமையிலான ஆர்சிபியை எதிர்கொள்வதற்கு நானும் ஆவலாக இருக்கிறேன். நாங்கள் இருவரும் நண்பர்கள் தான் என்றாலும், ஆர்சிபி வலுவான அணி என்பதில்லை எந்த சந்தேகமும் இல்லை” எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க: ஐபிஎல்: சென்னை சேப்பாக்கத்தில் போக்குவரத்து மாற்றம்! ரசிகர்கள் கவனிக்க..!

தோனி - ஜடேஜா அதிரடி வீண்! சென்னை சூப்பர் கிங்ஸுக்கு 2-வது தோல்வி!

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. மேலும் பார்க்க

டி20 போட்டிகளில் முதல் முறையாக 5 விக்கெட்டுகள்; மிட்செல் ஸ்டார்க் புதிய சாதனை!

டி20 போட்டிகளில் முதல் முறையாக மிட்செல் ஸ்டார்க் 5 விக்கெட்டுகள் கைப்பற்றி அசத்தியுள்ளார்.ஐபிஎல் தொடரில் விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற இன்றையப் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் தில்லி கேபிடல்ஸ் ... மேலும் பார்க்க

நிதீஷ் ராணா அதிரடி: 183 ரன்கள் இலக்கை துரத்திப் பிடிக்குமா சிஎஸ்கே?

சென்னை சூப்பர் கிங்ஸுக்கு எதிரான போட்டியில் முதலில் விளையாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் 9 விக்கெட்டுகளை இழந்து 182 ரன்கள் எடுத்துள்ளது.ஐபில் தொடரில் குவாஹாட்டியில் நடைபெற்று வரும் இன்றையப் போட்டியில் சென்னை ச... மேலும் பார்க்க

சன்ரைசர்ஸ் ஹைதராபாதை வீழ்த்தி தில்லி கேபிடல்ஸ் அபாரம்!

சன்ரைசர்ஸ் ஹைதராபாதை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி தில்லி கேபிடல்ஸ் அபார வெற்றி பெற்றது.ஐபிஎல் தொடரில் விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற இன்றைய போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் தில்லி கேப... மேலும் பார்க்க

ராஜஸ்தானுக்கு எதிராக சிஎஸ்கே பந்துவீச்சு; அணியில் இரண்டு மாற்றங்கள்!

ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.ஐபிஎல் தொடரில் குவாஹாட்டியில் நடைபெறும் இன்றையப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ... மேலும் பார்க்க

குஜராத் டைட்டன்ஸ் அணியில் மிடில் ஆர்டர் பிரச்னையா? ஷுப்மன் கில் பதில்!

குஜராத் டைட்டன்ஸ் அணியின் மிடில் ஆர்டர் குறித்து அந்த அணியின் கேப்டன் ஷுப்மன் கில் பேசியுள்ளார்.ஐபிஎல் தொடரில் அகமதாபாத் திடலில் நேற்று (மார்ச் 29) நடைபெற்ற போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் மும்பை... மேலும் பார்க்க