ஆசாராம் பாபு இடைக்கால ஜாமீன் நீட்டிப்பு: பாதிக்கப்பட்ட பெண் வீட்டிற்கு அதிகரிக்க...
டி20 போட்டிகளில் முதல் முறையாக 5 விக்கெட்டுகள்; மிட்செல் ஸ்டார்க் புதிய சாதனை!
டி20 போட்டிகளில் முதல் முறையாக மிட்செல் ஸ்டார்க் 5 விக்கெட்டுகள் கைப்பற்றி அசத்தியுள்ளார்.
ஐபிஎல் தொடரில் விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற இன்றையப் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் தில்லி கேபிடல்ஸ் அணிகள் விளையாடின. இந்தப் போட்டியில் தில்லி கேபிடல்ஸ் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஹைதராபாதை வீழ்த்தி அசத்தியது.
தில்லி கேபிடல்ஸ் தரப்பில் அபார பந்துவீச்சை வெளிப்படுத்திய மிட்செல் ஸ்டார்க் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். இதன் மூலம், டி20 போட்டிகளில் முதல் முறையாக மிட்செல் ஸ்டார்க் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். தில்லி கேபிடல்ஸ் அணிக்காக 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய முதல் வேகப் பந்துவீச்சாளர் என்ற சாதனையையும் அவர் படைத்துள்ளார்.
We are - by this spell ⭐
— IndianPremierLeague (@IPL) March 30, 2025
First FIFER of #TATAIPL 2025 and it belongs to Mitchell Starc
Updates ▶️ https://t.co/L4vEDKzthJ#TATAIPL | #DCvSRH | @DelhiCapitalspic.twitter.com/KNjvQqqq5Q
இதையும் படிக்க: அதிரடியாக விளையாட எங்களிடம் வீரர்கள் இருக்கிறார்கள், தப்பு கணக்கு வேண்டாம்: சிஎஸ்கே பயிற்சியாளர்
இதற்கு முன்னதாக கடந்த 2008 ஆம் ஆண்டு தில்லி கேபிடல்ஸ் அணிக்காக சுழற்பந்துவீச்சாளர் அமித் மிஸ்ரா முதல் வீரராக 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றியிருந்தார். தற்போது, அந்த வரிசையில் இரண்டாவது வீரராக மிட்செல் ஸ்டார்க் இணைந்துள்ளார்.