Parliament ; Assembly : அனல் பறந்த விவாதங்கள்! | விரக்தியில் Annamalai BJP | Imp...
அமெரிக்க பொருள்கள் மீதான வரியை இந்தியா கணிசமாகக் குறைத்திடும்: மறைமுகமாக எச்சரிக்கிறாரா டிரம்ப்?
வாஷிங்டன்: இந்தியாவில் அமெரிக்க பொருள்களுக்கு விதிக்கப்பட்டுள்ள வரி விரைவில் குறைக்கப்படும் என்று தெரிவித்துள்ளார் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்.
ஏப்ரல் 2-ஆம் தேதிமுதல், அமெரிக்க பொருள்களுக்கு எந்தெந்த நாடுகளில் எந்தளவுக்கு வரி விதிக்கப்பட்டுள்ளதோ அதேபாணியில், அமெரிக்காவிலும் வெளிநாட்டு பொருள்கள் மீது வரி விதிக்கப்படும் என்று டிரம்ப் அறிவித்திருந்த நிலையில், இது குறித்து, செவ்வாய்க்கிழமை(ஏப். 1) பேசிய டிரம்ப், ”அமெரிக்க பொருள்களுக்கான வரியை இந்தியா கணிசமாகக் குறைக்கும் என்று தெரிய வந்துள்ளது. அதேபோல, இன்னும் பல நாடுகள் வரி குறைப்பு நடவடிக்கையில் ஈடுபட உள்ளன’ என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக, இந்தியாவில் அரசு முன்னெடுத்து வரும் ‘மேக் இன் இந்தியா’ திட்டம் மற்றும் பற் வர்த்தக கொள்கைகளைக் குறிப்பிட்டு விமர்சித்திருந்த டிரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு நிர்வாகம், அமெரிக்காவிலிருந்து இறக்குமதியாகும் வேளாண் பொருள்களுக்கு 100 சதவீதம் வரி விதிக்கப்படுவதற்கும் கடும் எதிர்ப்பை பதிவு செய்திருந்தது. இதனிடையே, ஏப். 2-முதல், வெளிநாட்டு பொருள்களுக்கு அதிகமான வரிவிதிக்கப் போவதாக தெரிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.
இதனைத்தொடர்ந்து, அமெரிக்காவிலிருந்து இறக்குமதியாகும் குறிப்பிட்ட சில பொருள்களுக்கு வரியை குறைத்து வரி தளர்வு நடவடிக்கைகளில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. மேலும், அமெரிக்க நிறுவனங்களுக்குச் சாதகமாக அந்நாட்டில் தயாரிக்கப்படும் பல பொருள்களுக்கும் வரி குறைக்கப்படும் என்றும் மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
டிரம்ப்பும் பிரதமர் மோடியும் அமெரிக்காவில் நிகழாண்டின் தொடக்கத்தில் சந்தித்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதன் விளைவாக, இந்த வரி தளர்வு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதாகப் பார்க்கப்படுகின்றன.
இந்த நிலையில், மத்திய அரசு அமெரிக்காவுக்கு மேலும் பல சலுகைகள் காட்டும் என்பதை அதீத நம்பிக்கையுடன் வெளிப்படுத்தியிருக்கிறார் டிரம்ப்.ஒருவேளை, அப்படிச் செய்யாவிட்டால், இந்திய பொருள்களுக்கு வரி அதிகம் விதிக்கப்படும் என்கிற மறைமுக எச்சரிக்கையாகவும் டிரம்ப்பின் இந்த கருத்து பார்க்கப்படுகறது.