செய்திகள் :

RBI's 90 Years: இந்திய ரிசர்வ் வங்கிக்கு அடித்தளமிட்ட அண்ணல் அம்பேத்கர்; வரலாறு என்ன?

post image

தலித் வரலாற்று மாதம் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதத்தில் கொண்டாடப்படுகிறது.

இது தலித் சமூகத்தின் போராட்டங்கள், சாதனைகள் மற்றும் பங்களிப்புகளை நினைவுகூரவும், அவர்களின் வரலாற்றை உலகிற்கு எடுத்துரைக்கவும் அர்ப்பணிக்கப்பட்ட ஒரு மாதம்.

அதன் தொடக்க நாளான இன்று தலித் வரலாற்றோடு மட்டுமல்லாமல் இந்தியப் பொருளாதார வரலாற்றோடும் தொடர்புடையது.

Ambedkar

ஆம். இன்றைய தினத்தில்தான் இந்தியாவின் பொருளாதாரத்தை நிர்ணயம் செய்யும் ரிசர்வ் பாங்க் ஆஃப் இந்தியா (RBI) ஏப்ரல் 1, 1935 தொடங்கப்பட்டது.

நாணய வெளியீடு தொடங்கி அந்நிய செலாவணி வரை இந்தியாவின் நிதி அமைப்பை வடிவமைப்பதில் முக்கிய பங்கு கொண்ட இந்த அமைப்பின் அடித்தளம், சமூக புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கரால் போடப்பட்டது என்பது பலருக்கும் தெரியாத உண்மை.

இதன் வரலாறு என்ன? இந்தியப் பொருளாதார கட்டமைப்பில் அம்பேத்கரின் பங்கு என்ன காணலாம் வாருங்கள்!

1913-17, 1922-ம் ஆண்டுகளில் பிரிட்டிஷ் இந்தியாவில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிகள் வங்கிகளின் தோல்விகளுக்கு வழிவகுத்தன.

இது இந்தியாவில் ஒரு மத்திய பொது வங்கியின் தேவையை உருவாக்கியது. முந்தைய முயற்சிகளான, 1773-ல் பெங்காலில் மத்திய வங்கி நிறுவும் திட்டம், 1807-08ல் பம்பாய் அரசாங்க உறுப்பினரால் முன்மொழியப்பட்ட பொது வங்கி திட்டம் ஆகியவை அதன் நடைமுறை சிக்கல்கள் காரணமாக கிழக்கிந்திய கம்பெனியால் நிராகரிக்கப்பட்டன.

அண்ணல் அம்பேத்கர்

இதை சரி செய்ய 1926-ல் நாணயம், பொருளாதாரம் மற்றும் வங்கி நிலைமைகள் குறித்து விரிவான ஆய்வு மேற்கொள்ள ராயல் கமிஷன் ஆஃப் கரன்சி அண்ட் ஃபைனான்ஸ் (ஹில்டன் யங் கமிஷன்) என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது.

அந்த அமைப்பின் முன்னால் இந்திய பொருளாதாரத்தின் பலவீனங்களை அம்பேத்கர் கூர்மையாகச் சுட்டிக்காட்டினார். பிரிட்டிஷ் ஆட்சியில் இந்தியர்களுக்குப் பொருளாதாரச் சுதந்திரம் மறுக்கப்பட்டதை அவர் விமர்சிக்க தயங்கவில்லை. அவரது சாட்சியம் கமிஷனை ஆழமாகப் பாதித்து, மேலும் ஒரு மத்திய வங்கியின் தேவையை உறுதிப்படுத்தியது.

அதில் குறிப்பாக அம்பேத்கரின் 'The Problem Of The Rupee Its Origin And Its Solution - ரூபாயின் பிரச்னை - அதன் தோற்றமும் அதன் தீர்வும்' என்ற புத்தகம், இந்திய நாணய முறையைப் புரிந்துகொள்ளவும் சீர்திருத்தவும் ஒரு தனித்துவமான பார்வையை அவர்களுக்கு வழங்கியது.

அவர் வெள்ளி தரநிலைக்குப் பதிலாக தங்க தரநிலையை (Gold Standard) அல்லது தங்க மாற்று முறையை (Gold Exchange Standard) பரிந்துரைத்தார்.

இது பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்கும், பொருளாதாரக் கட்டமைப்பை உறுதி செய்வதற்கும் உதவும் என்று கூறினார்.

இந்த யோசனைகள் ஹில்டன் யங் கமிஷனை வெகுவாக ஈர்த்தது, அதுமட்டுமல்லாமல் RBI-யின் அடித்தளத்தைக் கட்டமைக்கவும் உதவியது.

அண்ணல் அம்பேத்கர்

அம்பேத்கர் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் (Columbia University) பொருளாதாரத்தில் முனைவர் பட்டம் (Ph.D.) பெற்றவர்.

அவரது The Evolution of Provincial Finance in British India என்ற ஆய்வறிக்கை, பிரிட்டிஷ் காலனித்துவ நிதி முறையை விமர்சித்து, இந்தியாவிற்குச் சுயசார்பான பொருளாதார அமைப்பின் தேவையை வலியுறுத்தியது.

RBI 1935-ல் நிறுவப்பட்டபோது, அதன் முதல் தலைமையகம் கொல்கத்தாவில் (Calcutta) அமைந்தது. பின்னர் 1937-ல் அது மும்பைக்கு மாற்றப்பட்டது.

இந்த மாற்றம், இந்தியாவின் பொருளாதார மையமாக மும்பையின் முக்கியத்துவத்தைப் பிரதிபலித்தது. மேலும் அம்பேத்கர் வலியுறுத்திய நிதி உள்ளடக்கத்திற்கு (Financial Inclusion) ஏற்ப, நாடு முழுவதும் வங்கிச் சேவைகளை விரிவுபடுத்துவதற்கு உதவியது.

Constitution Day Of India - அம்பேத்கர்

அம்பேத்கர் RBI-யை ஒரு பொருளாதாரக் கருவியாக மட்டுமல்ல, சமூக மாற்றத்திற்கான ஒரு வழியாகவும் பார்த்தார். அவர் வறுமையில் வாழும் மக்களுக்கு வங்கிச் சேவைகளை எளிதாக்குவதற்கும், கிராமப்புறப் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கும் வலியுறுத்தினார்.

இன்று RBI-யின் நிதி உள்ளடக்கத் திட்டங்கள் (Financial Inclusion) அவரது பார்வையின் நீட்சியாகவே கருதப்படுகின்றன.

RBI நிறுவப்பட்டபோது, அது தனியார்ப் பங்குதாரர்களால் நிர்வகிக்கப்பட்டது. ஆனால் 1949-ல் தேசியமயமாக்கப்பட்டது. இந்த மாற்றத்திற்கு அம்பேத்கர் ஆதரவு அளித்தார்.

ஏனெனில் அவர் அரசு கட்டுப்பாட்டில் உள்ள ஒரு மத்திய வங்கியே பொது நலனை உறுதி செய்யும் என்று நம்பினார். இதற்கு அடித்தளமாக அவர் பங்களித்த 'வங்கி நிறுவனங்கள் சட்டம், 1949' - வணிக மற்றும் பொது வங்கிகளை ஒழுங்குபடுத்துவதில் RBI-க்கு அதிக அதிகாரம் வழங்கியது.

RBI

அண்ணல் அம்பேத்கரின் இத்தகைய மகத்தான பங்களிப்பைப் பாராட்டி ரிசர்வ் வங்கி, அவரது 125-வது பிறந்த நாள் விழா கொண்டாட்டத்தில் அவரது பெயரில் நாணயங்களை வெளியிட்டது.

இந்தியப் பொருளாதார மேதையும், நோபல் பரிசு பெற்றவருமான அமர்த்தியா சென், "எனது பொருளாதாரத் தந்தை - அம்பேத்கர்" என்று புகழாரம் சூட்டியிருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY

Charles Darwin: 'பதற்ற நோயாளி' டார்வின் பல ஆண்டுகள் கப்பலில் பயணித்தது எப்படி? | My Vikatan

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

'ஜெயலலிதாவுக்குப் பிடித்த பிடிவாதக்காரி; புலம்பிய சந்திரபாபு' - நானே கேள்வி நானே பதில்! | My vikatan

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க