செய்திகள் :

நிதீஷ் ராணா அதிரடி: 183 ரன்கள் இலக்கை துரத்திப் பிடிக்குமா சிஎஸ்கே?

post image

சென்னை சூப்பர் கிங்ஸுக்கு எதிரான போட்டியில் முதலில் விளையாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் 9 விக்கெட்டுகளை இழந்து 182 ரன்கள் எடுத்துள்ளது.

ஐபில் தொடரில் குவாஹாட்டியில் நடைபெற்று வரும் இன்றையப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் பந்துவீச்சைத் தேர்வு செய்ய, ராஜஸ்தான் ராயல்ஸ் முதலில் விளையாடியது.

இதையும் படிக்க: அதிரடியாக விளையாட எங்களிடம் வீரர்கள் இருக்கிறார்கள், தப்பு கணக்கு வேண்டாம்: சிஎஸ்கே பயிற்சியாளர்

நிதீஷ் ராணா அதிரடி, 183 ரன்கள் இலக்கு

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் சஞ்சு சாம்சன் களமிறங்கினர். ராஜஸ்தான் அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியாக அமைந்தது. யஷஸ்வி ஜெய்ஸ்வால் 4 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன் பின் களமிறங்கிய நிதீஷ் ராணா அதிரடியில் மிரட்டினார். அதிரடியாக விளையாடி அவர் ஃபோர்கள் மற்றும் சிக்ஸர்களை பறக்கவிட்டார். மறுமுனையில் அவருக்கு உறுதுணையாக விளையாடிய சஞ்சு சாம்சன் 16 பந்துகளில் 20 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் ஒரு பவுண்டரி மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கும்.

அதன் பின், நிதீஷ் ராணாவுடன் கேப்டன் ரியான் பராக் ஜோடி சேர்ந்தார். அதிரடியில் மிரட்டிய நிதீஷ் ராணா அரைசதம் கடந்து அசத்தினார். அவர் 36 பந்துகளில் 81 ரன்கள் எடுத்து அஸ்வின் பந்துவீச்சில் எம்.எஸ்.தோனியிடம் ஸ்டம்பிங் ஆனார். அதில் 10 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்கள் அடங்கும். கேப்டன் ரியான் பராக் 28 பந்துகளில் 37 ரன்களும் (2 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள்), ஷிம்ரான் ஹெட்மேயர் 16 பந்துகளில் 19 ரன்களும் (ஒரு பவுண்டரி, ஒரு சிக்ஸர்) எடுத்தனர்.

இதையும் படிக்க: குஜராத் டைட்டன்ஸ் அணியில் மிடில் ஆர்டர் பிரச்னையா? ஷுப்மன் கில் பதில்!

சிஎஸ்கே தரப்பில் கலீல் அகமது, நூர் அகமது மற்றும் மதீஷா பதிரானா தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் ரவீந்திர ஜடேஜா தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.

183 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடி வருகிறது.

திட்டங்களை தெளிவாக செயல்படுத்திய மும்பை இந்தியன்ஸ்; பாராட்டிய நியூசி. வீரர்!

மும்பை இந்தியன்ஸ் அதனுடைய திட்டங்களை தெளிவாக செயல்படுத்தி முதல் வெற்றியைப் பெற்றுள்ளதாக நியூசிலாந்து வீரர் கேன் வில்லியம்சன் பாராட்டியுள்ளார்.ஐபிஎல் தொடரில் மும்பை வான்கடே திடலில் நடைபெற்ற நேற்றையப் ப... மேலும் பார்க்க

ஒவ்வொரு போட்டியிலும் 1% முன்னேற விரும்புகிறேன்: அர்ஷ்தீப் சிங்

பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக விளையாடும் இடதுகை வேகப் பந்துவீச்சாளர் ரஷ்தீப் சிங் சுய விமர்சனத்தை செய்துகொண்டு ஒவ்வொரு போட்டியிலும் 1 சதவிகிதம் முன்னேற வேண்டுமென விரும்புவதாக ஜியோ ஹாட்ஸ்டாருக்கு அளித்த பேட்... மேலும் பார்க்க

மதிய உணவு உண்ணாமல் விளையாடிய அஸ்வனி குமார்..! பாண்டியாவின் அறிவுரையால் கிடைத்த விக்கெட்!

அறிமுகப் போட்டி என்பதால் மதிய உணவு உண்ணாமலே விளையாடியதாக ஆட்ட நாயகன் விருது வென்ற இளம் மும்பை வீரர் அஸ்வனி குமார் பேசியுள்ளார்.ஐபிஎல் 18ஆவது சீசனின் 12ஆவது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு நிர்ணயி... மேலும் பார்க்க

மும்பை அணியில் இளம் வீரர்கள் தேர்வு குறித்து பேசிய ஹார்திக் பாண்டியா!

ஐபிஎல் 18ஆவது சீசனின் 12ஆவது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு நிர்ணயிக்கப்பட்ட 117 என்ற இலக்கினை 12.5 ஓவர்களில் வென்று அசத்தியது. இந்தப் போட்டியில் மும்பை சார்பாக அறிமுகமான அஸ்வினி குமார் 4 விக்கெ... மேலும் பார்க்க

அஸ்வனி, ரயான் அபாரம்; மும்பைக்கு முதல் வெற்றி

ஐபிஎல் போட்டியின் 12-ஆவது ஆட்டத்தில் மும்பை இண்டியன்ஸ் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடா்ஸை திங்கள்கிழமை வெற்றி கண்டது. முதலில் கொல்கத்தா 16.2 ஓவா்களில் 116 ரன்களுக்... மேலும் பார்க்க

அறிமுகப் போட்டியில் அசத்திய இளம் வீரர்; 116 ரன்களுக்கு ஆட்டமிழந்த கேகேஆர்!

மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான போட்டியில் முதலில் விளையாடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 116 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.ஐபிஎல் தொடரில் மும்பை வான்கடே திடலில் நடைபெற்று வரும் இன்றையப் போட்டியில் மும்பை இந்திய... மேலும் பார்க்க