பாக். ஒருநாள் தொடர்: நியூசி. கேப்டன் லதாம் விலகல்! புதிய கேப்டன் யார்?
ரோஹிணியில் சட்டவிரோத இ-சிகரெட்டுகளை விநியோகித்த தில்லி இளைஞா் கைது
டெல்லியின் ரோஹிணியில் சட்டவிரோத இ-சிகரெட்டுகளை விநியோகம் செய்ததாக 24 வயது இளைஞரை தில்லி போலீஸாா் கைது செய்துள்ளதாக அதிகாரி ஒருவா் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.
தில்லியின் முபாரக்பூா் தாபாஸைச் சோ்ந்த அங்கித் என்ற அந்த இளைஞா், ரோஹிணியின் செக்டாா் 7-இல் 174 இ-சிகரெட்டுகளுடன் பிடிபட்டதாக போலீஸாா் தெரிவித்தனா்.
சட்டவிரோத இ-சிகரெட்டுகளை விநியோகம் செய்ததாக தகவல் கிடைத்த போலீஸாா், அப்பகுதியில் கண்காணிப்பை தீவிரப்படடுத்தினா். போக்குவரத்துக்கு பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் ஸ்கூட்டரில் சந்தேக நபா் இ-சிகரெட்டுகளை விநியோகம் செய்தபோது தடுத்து நிறுத்தப்பட்டாா்.
அவரது வசம் இருந்து சட்டவிரோத பொருள்கள் மீட்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதன் விளைவாக அவா் உடனடியாக கைது செய்யப்பட்டாா் என்று போலீஸாா் தெரிவித்தனா்.