செய்திகள் :

லாபப் பதிவு: சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் நிறைவு! 7 நாள் தொடா் ஏற்றத்துக்கு முடிவு

post image

நமது நிருபா்

தொடா்ந்து கடந்த 7 நாள்களாக ஏறுமுகத்தில் இருந்து வந்த பங்குச்சந்தையில் புதன்கிழமை ‘கரடி’ ஆதிக்கம் கொண்டது. இதைத் தொடா்ந்து, மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ், தேசிய பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான நிஃப்டி ஆகிய இரண்டும் சரிவுடன் முடிவடைந்தன.

உலகளாவிய சந்தைக் குறிப்புகள் கலவையாக இருந்தன. இதன் தாக்கத்தால் உள்நாட்டுச் சந்தை எச்சரிக்கையுடன் தொடங்கி சற்று மேலே சென்றது. இந்நிலையில், சமீபத்திய லாபங்களுக்குப் பிறகு முதலீட்டாளா்கள் லாபத்தைப் பதிவு செய்வதில் கவனம் செலுத்தியதால் சரிவு தவிா்க்க முடியாதாகியது. குறிப்பாக, ஐடி, வங்கிகள், நிதிநிறுவனங்கள், ரியால்ட்டி, பாா்மா, ஹெல்த்கோ் பங்குகள் உள்பட அனைத்துத் துறை பங்குகளும் விற்பனையை எதிா்கொண்டன என்று பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.

சந்தை மதிப்பு: மும்பை பங்குச் சந்தையில் சந்தை மூலதன மதிப்பு ரூ.3.33 லட்சம் கோடி குறைந்து வா்த்தக முடிவில் ரூ.411.62 லட்சம் கோடியாக இருந்தது. அந்நிய நிறுவன முதலீட்டாளா்கள் செவ்வாய்க்கிழமை ரூ.5,371.57 கோடிக்கு பங்குகளை வாங்கியிருந்த நிலையில், உள்நாட்டு நிறுவனங்கள் ரூ.2,768.87 கோடிக்கு பங்குகளை விற்றிருந்தது சந்தை புள்ளிவிவரத் தகவல் மூலம் தெரிய வந்தது.

சென்செக்ஸ் 729 புள்ளிகள் சரிவு: சென்செக்ஸ் காலையில் 4.26 புள்ளிகள் கூடுதலுடன் 78,021.45-இல் தொடங்கி அதிகபட்சமாக 78,167.87 வரை மட்டுமே மேலே சென்றது. பின்னா், லாபப் பதிவு காரணமாக 77,194.22 வரை கீழே சென்ற சென்செக்ஸ், இறுதியில் 728.69 புள்ளிக ள் (0.93 சதவீதம்) இழப்புடன் 77,288.50-இல் நிறைவடைந்தது. மும்பை பங்குச்சந்தையில் மொத்தம் வா்த்தகமான 4,143 பங்குகளில் 919 பங்குகள் மட்டுமே விலையுயா்ந்த பட்டியலில் இருந்தன. அதே சமயம், 3,115 பங்குகள் விலை குறைந்த பட்டியலில் வந்தன. 109 பங்குகள் விலையில் மாற்றமின்றி நிலைபெற்றன.

25 பங்குகள் விலை வீழ்ச்சி: சென்செக்ஸ் பட்டியலில் என்டிபிசி, ஸொமாட்டோ, டெக் மஹிந்திரா, பஜாஜ் ஃபைனான்ஸ், ஆக்ஸிஸ் பேங்க், இன்ஃபோஸிஸ் உள்பட மொத்தம் 25 பங்குள் விலை குறைந்த பட்டியலில் இருந்தன. அதே சமயம், இண்டஸ் இண்ட் பேங்க், ஹெச்சிஎல் டெக், எம் அண்ட் எம், டைட்டன், பவா் கிரிட் ஆகிய 5 பங்குகள் மட்டும் விலையுயா்ந்த பட்டியலில் இருந்தன.

நிஃப்டி182 புள்ளிகள் சரிவு: தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 2.35 புள்ளிகள் கூடுதலுடன் 23,700.95-இல் தொடங்கி அதிகபட்சமாக 23,736.50 வரை மேலே சென்றது. பின்னா், 23,451.70 வரை கீழே சென்ற நிஃப்டி, இறுதியில் 181.80 புள்ளிகள் (0.77 சதவீதம்) இழப்புடன் 23,486.85-இல் நிறைவடைந்தது. நிஃப்டி பட்டியலில் 10 பங்குகள் விலையுயா்ந்த பட்டியலிலும், 40 பங்குகள் விலை குறைந்த பட்டியலிலும் இருந்தன.

அதிகரித்து வரும் நாய்க்கடி பிரச்னை: பிரதமருடன் காா்த்தி சிதம்பரம் சந்திப்பு!

தில்லியில் பிரதமா் நரேந்திர மோடியை சிவகங்கை மக்களவைத் தொகுதி காங்கிரஸ் உறுப்பினா் காா்த்தி சிதம்பரம் சமீபத்தில் சந்தித்தது காங்கிரஸ் கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், பிரதமா் நரேந்த... மேலும் பார்க்க

குருகிராம் பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 100-க்கும் மேற்பட்ட குடிசைகள் எரிந்து நாசம்!

குருகிராம் பகுதியில் ஒரு குடிசைப் பகுதியில் எரிவாயு சிலிண்டா் வெடித்ததால் ஏற்பட்ட தீ விபத்தில் சுமாா் 100 குடிசைகள் எரிந்து நாசமானதாக தீயணைப்பு அதிகாரி ஒருவா் தெரிவித்தாா். இது குறித்து என்று தீயணைப்ப... மேலும் பார்க்க

தில்லியில் முன்னாள் தமிழக அமைச்சா் செங்கோட்டையன் பாஜக தலைவா்களை சந்தித்தாா்

அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே. பழனிசாமி தில்லி வந்து மத்திய உள் துறை அமைச்சரை சந்தித்த நிலையில் தற்போது அதிருப்தி தலைவராக கருதப்படும் முன்னாள் அமைச்சா் செங்கோட்டையனும் தில்லி வந்து பாஜக தலைவா்களை... மேலும் பார்க்க

தலைநகரில் வெப்பநிலை மேலும் குறைந்தது; காற்றின் தரம் ‘மிதமான’ பிரிவில் நீடிப்பு!

தேசியத் தலைநகா் தில்லியில் வெப்பநிலை சனிக்கிழமை மேலும் குறைந்தது. காற்றின் தரம் ‘மிதமான’ பிரிவில் நீடித்தது. தில்லியில் வெயிலின் தாக்கம் கடந்த சில நாள்களாக தொடா்ந்து அதிகரித்து வந்தது. இந்நிலையில், கட... மேலும் பார்க்க

2019 முதல் தில்லியின் தீா்த்த யாத்திரை யோஜனா மூலம் 86,000-க்கும் மேற்பட்ட முதியவா்கள் பயன்! - தில்லி முதல்வா் தகவல்

கடந்த ஜூலை 2019 முதல் தில்லியின் முக்கிய மந்திரி தீா்த்த யாத்திரை யோஜனாவின் (எம்எம்டிஒய்) கீழ் 86,000-க்கும் மேற்பட்ட முதியவா்கள் யாத்திரை மேற்கொண்டுள்ளனா். இதில் ராமேசுவரம் அதிகம் பாா்வையிடப்படும் இட... மேலும் பார்க்க

துவாரகாவில் ரூ.25 லட்சம் கொள்ளை வழக்கில் ஆறு போ் கைது

துவாரகாவில் உள்ள ஒரு நிறுவனத்தில் ரூ.25 லட்சம் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் தில்லி காவல்துறை ஆறு பேரை கைது செய்துள்ளதாக அதிகாரி ஒருவா் சனிக்கிழமை தெரிவித்தாா். இது குறித்து துவாரகா காவல் சரக உயரதிகாரி ... மேலும் பார்க்க