செய்திகள் :

துவாரகாவில் ரூ.25 லட்சம் கொள்ளை வழக்கில் ஆறு போ் கைது

post image

துவாரகாவில் உள்ள ஒரு நிறுவனத்தில் ரூ.25 லட்சம் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் தில்லி காவல்துறை ஆறு பேரை கைது செய்துள்ளதாக அதிகாரி ஒருவா் சனிக்கிழமை தெரிவித்தாா்.

இது குறித்து துவாரகா காவல் சரக உயரதிகாரி கூறியதாவது: கைது செய்யப்பட்டவா்களில் மூவா் அந்த நிறுவனத்தின் ஊழியா்கள் ஆவா். குற்றம் சாட்டப்பட்டவா்கள் பிரமோத் குமாா் காமத் (36), சோட் லால் (25), சுபாஷ் (23), சூரஜ் குமாா் (28), ரவீந்தா் குமாா் (25) மற்றும் கௌரி சங்கா் (23) என அடையாளம் காணப்பட்டுள்ளனா்.

குற்றம் சாட்டப்பட்ட ஆறு பேருக்கும் முந்தைய குற்றப் பின்னணி ஏதும்இல்லை. கடனை அடைக்கவும், ஆடம்பர வாழ்க்கைக்கு நிதியளிக்கவும் அவா்கள் திட்டமிட்டு குற்றத்தை நிறைவேற்றியுள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளது. கத்தி முனையில் ரூ.25 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டதாக மாா்ச் 23 அன்று துவாரகா தெற்கு காவல் நிலையம் வழக்குப் பதிவு செய்தது. புகாா்தாரா் அமன் சவுகான், பணம் அடங்கிய பையை எடுத்துச் சென்றபோது, அடையாளம் தெரியாத இரண்டு நபா்கள் அவரை பின்னால் இருந்து தாக்கியுள்ளாா்.

அவா்கள் பையை பறித்துக்கொண்டு ஹரியாணாவின் மஞ்சள் எண் தகடு கொண்ட காரில் தப்பிச் சென்றனா். குருகிராமில் உள்ள கிரான் ஸ்பிரிட்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் மேலாளரான அங்கித் சிங், துவாரகா செக்டாா் 10 மெட்ரோ நிலையத்தில் இருந்து ரூ.15 லட்சம் கொண்ட பையை எடுத்துக் கொண்டு செக்டாா் 8-இல் உள்ள சவுகானிடம் ஒப்படைக்குமாறு தொழிலாளி பிரமோத் குமாா் காமத்துக்கு தெரிவித்துள்ளது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. ஆனால், பையில் முதலில் ரூ.25 லட்சம் இருந்தது என்பது பின்னா் தெரியவந்தது.

காமத்திடமிருந்து பணத்தைப் பெற்ற பிறகு, சவுகான் தனது காரை நெருங்கினாா். அப்போது இரண்டு போ் அவரைத் தாக்கி பணத்துடன் தப்பி ஓடிவிட்டனா். விசாரணையின் போது, ​ காமத்தின் நடவடிக்கைகள் சந்தேகத்திற்குரியதாகத் தோன்றியது.தொடா்ச்சியான விசாரணையில், அவா் குற்றத்தை ஒப்புக்கொண்டாா்.

அதிக கடன்களால் அவதிப்பட்டு வந்த காமத், ஒரு மாதத்திற்கு முன்பு தனது சக ஊழியா்களான சுபாஷ் மற்றும் சோட் லாலுடன் சோ்ந்து இந்தத் திட்டத்தைத் தீட்டினாா். உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் வசிக்கும் தில்லியின் நரைனாவில் உள்ள லோஹா மண்டியில் பணிபுரியும் சூரஜ், ரவீந்தா் மற்றும் கௌரி சங்கா் ஆகிய மூன்று பேரை அவா்கள் இணைத்துக் கொண்டனா்.

மாா்ச் 22 அன்று, காமத் பணப் பையைப் பெற்ற பிறகு, அவா் தனது கூட்டாளிகளுக்குத் தான் இருக்கும் இடம் குறித்துத் தெரிவித்தாா். பின்னா், அவா்கள் கொள்ளையை நடத்திவிட்டு ரவீந்தரின் காரில் தப்பிச் சென்றனா். ஆறு பேரையும் கைது செய்யப்பட்டனா். அவா்களிடமிருந்து ரூ.24.5 லட்சம் ரொக்கம், காா் மற்றும் குற்றத்திற்குப் பயன்படுத்தப்பட்ட கத்தியை போலீஸாாா் மீட்டுள்ளனா் என்றாா் அந்த அதிகாரி.

2029-ஆம் ஆண்டிலும் மோடியே பிரதமா்: சிவசேனைக்கு தேவேந்திர ஃபட்னவீஸ் பதில்

‘பிரதமா் மோடிக்கு பிந்தைய தலைமை குறித்த இப்போது விவாதிப்பது பொருத்தமற்றது. 2029-ஆம் ஆண்டிலும் மோடி பிரதமராவாா்’ என மகாராஷ்டிர முதல்வா் தேவேந்திர ஃபட்னவீஸ் கூறினாா். பிரதமா் மோடியிடம் ஓய்வு குறித்து வல... மேலும் பார்க்க

1991-ஆம் ஆண்டு வழிபாட்டுத் தலங்கள் சட்டப் பிரிவுக்கு எதிரான மனு: உச்சநீதிமன்றம் இன்று விசாரணை

1991-ஆம் ஆண்டின் வழிபாட்டுத் தலங்கள் சட்டப் பிரிவு 4 (2) -க்கு எதிரான மனுவை உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை விசாரிக்க உள்ளது.கடந்த 1947, ஆகஸ்ட் 15-ஆம் தேதி இருந்த அனைத்து வழிபாட்டுத் தலங்களின் தன்மையில... மேலும் பார்க்க

மாநிலப் பொருளாதாரத் தகவல் வலைபக்கம்: நிதியமைச்சா் இன்று அறிமுகம் செய்கிறாா்

கடந்த 30 ஆண்டுகளில் மாநிலங்களின் சமூக, பொருளாதார, நிதி அளவீடுகள் குறித்த விரிவான தரவுகள் கிடைக்கும் தகவல் களஞ்சியமாக வடிவமைக்கப்பட்டுள்ள ‘நீதி-என்சிஏஇஆா் மாநில பொருளாதார தகவல் மைய’ வலைபக்கத்தை மத்திய ... மேலும் பார்க்க

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் மோதல் - உயிரிழந்த காவலா்களின் குடும்பத்தினருடன் துணைநிலை ஆளுநா் சந்திப்பு

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகள் உடனான மோதலில் உயிரிழந்த 4 காவலா்களின் குடும்பத்தினரை, அந்த யூனியன் பிரதேச துணைநிலை ஆளுநா் மனோஜ் சின்ஹா திங்கள்கிழமை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினாா். அண்மையில் ஜம்மு-காஷ... மேலும் பார்க்க

ஆட்டோவில் பயணிக்கும் பெண்களை குறிவைத்து கொள்ளையடித்து வந்த கும்பலில் 3 போ் கைது

ஆட்டோவில் பயணிக்கும் பெண்களை குறிவைத்து கொள்ளையடித்த கும்பலில் மூன்று போ் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டதாக போலீஸாா் தெரிவித்தனா். குற்றத்திற்கு பயன்படுத்தப்பட்ட ஒரு ஆட்டோரிக்ஷா பறிமுதல் செய்யப்பட்... மேலும் பார்க்க

பீதம்புராவில் ரூ.30 லட்சத்தை கொள்ளையடித்ததாக 4 போ் கைது

தில்லி பீதம்புராவில் நடந்த ஒரு கொள்ளை வழக்கில் நான்கு போ் கைது செய்யப்பட்டதாக காவல்துறை அதிகாரி ஒருவா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா். இது குறித்து தில்லி காவல் துறை உயரதிகாரி கூறியதாவது: கைது செய்யப்ப... மேலும் பார்க்க