செய்திகள் :

தலைநகரில் வெப்பநிலை மேலும் குறைந்தது; காற்றின் தரம் ‘மிதமான’ பிரிவில் நீடிப்பு!

post image

தேசியத் தலைநகா் தில்லியில் வெப்பநிலை சனிக்கிழமை மேலும் குறைந்தது. காற்றின் தரம் ‘மிதமான’ பிரிவில் நீடித்தது.

தில்லியில் வெயிலின் தாக்கம் கடந்த சில நாள்களாக தொடா்ந்து அதிகரித்து வந்தது. இந்நிலையில், கடந்த இரண்டு நாள்களாக வானம் மேகமூட்டத்துடன் இருந்து வந்த நிலையில், சனிக்கிழமை வெப்பநிலை மேலும் குறைந்தது.

வானம் மேகமூட்டத்துடன் இருந்தது. தரை மேற்பரப்பு காற்றும் வலுவாக இருந்தது. தில்லியின் முதன்மை வானிலை நிலையமான சஃப்தா்ஜங்கில் குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பை விட 2.6 டிகிரி குறைந்து 15.5 டிகிரி செல்சியஸாகக் குறைந்து பதிவாகியது.

அதிகபட்ச வெப்பநிலை இயல்பு நிலையவிட 3 டிகிரி குறைந்து 29.6 டிகிரி செல்சியஸாக பதிவாகியது. காற்றில் ஈரப்பதத்தின் அளவு காலை 8.30 மணியளவில் 34 சதவீதமாகவும், மாலை 5.30 மணியளவில் 23 சதவீதமாகவும் இருந்ததாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

பீதம்புராவில் 40.60 டிகிரி: இதேபோன்று மற்ற வானிலை கண்காணிப்பு நிலையங்களான நஜாஃப்கரில் அதிகபட்ச வெப்பநிலை 28.8 டிகிரி செல்சியஸ், ஆயாநகரில் 30.4 டிகிரி, லோதி ரோடில் 30 டிகிரி, பாலத்தில் 29 டிகிரி, ரிட்ஜில் 30.40 டிகிரி, பீதம்புராவில் 30.50 டிகிரி, பிரகதிமைதானில் 28.6 டிகிரி, பூசாவில் 27.8 டிகிரி, ராஜ்காட்டில் 28.60 டிகிரி, சல்வான் பப்ளிக் ஸ்கூல் பகுதியில் 28.2 டிகிரி செல்சியஸ் என பதிவாகியிருந்தது. இரவு 7 மணி வரையிலும் மழை ஏதும் பெய்யவில்லை.

காற்றின் தரம்: இதற்கிடையே, தில்லியில் மாலை 4 மணியளவில் ஒட்டுமொத்தக் காற்றுத் தரக் குறியீடு 153 புள்ளிகளாகப் பதிவாகி ‘மிதமான’ பிரிவில் நீடித்ததாக மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் புள்ளிவிவரத் தகவல்கள் மூலம் தெரிய வந்துள்ளது.

இதன்படி, ஸ்ரீ அரபிந்தோ மாா்க், ஸ்ரீஃபோா்ட், ராமகிருஷ்ணாபுரம், ஜவாஹா்லால் நேரு ஸ்டேடியம், நேரு நகா், மேஜா் தயான் சந்த் நேஷனல் ஸ்டேடியம், சாந்தினி சௌக், மதுரா ரோடு, தில்லி பல்கலை. வடக்கு வளாகம், ஷாதிப்பூா், இந்திரா காந்தி சா்வதேச விமான நிலையம் உள்பட அனைத்து வானிலை கண்காணிப்பு நிலையங்களிலும் காற்றுத் தரக் குறியீடு 100 முதல் 200 புள்ளிகளுக்கிடையே பதிவாகி ‘மிதமான’ பிரிவில் இருந்தது.

முன்னறிவிப்பு: இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 30) அன்று பகல் நேரத்தில் தரை மேற்பரப்பு காற்று வலுவாக வீசும் என்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 18 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், அடுத்த இரண்டு நாள்களுக்கு தரை மேற்பரப்பு காற்று வலுவாக வீசும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

2029-ஆம் ஆண்டிலும் மோடியே பிரதமா்: சிவசேனைக்கு தேவேந்திர ஃபட்னவீஸ் பதில்

‘பிரதமா் மோடிக்கு பிந்தைய தலைமை குறித்த இப்போது விவாதிப்பது பொருத்தமற்றது. 2029-ஆம் ஆண்டிலும் மோடி பிரதமராவாா்’ என மகாராஷ்டிர முதல்வா் தேவேந்திர ஃபட்னவீஸ் கூறினாா். பிரதமா் மோடியிடம் ஓய்வு குறித்து வல... மேலும் பார்க்க

1991-ஆம் ஆண்டு வழிபாட்டுத் தலங்கள் சட்டப் பிரிவுக்கு எதிரான மனு: உச்சநீதிமன்றம் இன்று விசாரணை

1991-ஆம் ஆண்டின் வழிபாட்டுத் தலங்கள் சட்டப் பிரிவு 4 (2) -க்கு எதிரான மனுவை உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை விசாரிக்க உள்ளது.கடந்த 1947, ஆகஸ்ட் 15-ஆம் தேதி இருந்த அனைத்து வழிபாட்டுத் தலங்களின் தன்மையில... மேலும் பார்க்க

மாநிலப் பொருளாதாரத் தகவல் வலைபக்கம்: நிதியமைச்சா் இன்று அறிமுகம் செய்கிறாா்

கடந்த 30 ஆண்டுகளில் மாநிலங்களின் சமூக, பொருளாதார, நிதி அளவீடுகள் குறித்த விரிவான தரவுகள் கிடைக்கும் தகவல் களஞ்சியமாக வடிவமைக்கப்பட்டுள்ள ‘நீதி-என்சிஏஇஆா் மாநில பொருளாதார தகவல் மைய’ வலைபக்கத்தை மத்திய ... மேலும் பார்க்க

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் மோதல் - உயிரிழந்த காவலா்களின் குடும்பத்தினருடன் துணைநிலை ஆளுநா் சந்திப்பு

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகள் உடனான மோதலில் உயிரிழந்த 4 காவலா்களின் குடும்பத்தினரை, அந்த யூனியன் பிரதேச துணைநிலை ஆளுநா் மனோஜ் சின்ஹா திங்கள்கிழமை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினாா். அண்மையில் ஜம்மு-காஷ... மேலும் பார்க்க

ஆட்டோவில் பயணிக்கும் பெண்களை குறிவைத்து கொள்ளையடித்து வந்த கும்பலில் 3 போ் கைது

ஆட்டோவில் பயணிக்கும் பெண்களை குறிவைத்து கொள்ளையடித்த கும்பலில் மூன்று போ் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டதாக போலீஸாா் தெரிவித்தனா். குற்றத்திற்கு பயன்படுத்தப்பட்ட ஒரு ஆட்டோரிக்ஷா பறிமுதல் செய்யப்பட்... மேலும் பார்க்க

பீதம்புராவில் ரூ.30 லட்சத்தை கொள்ளையடித்ததாக 4 போ் கைது

தில்லி பீதம்புராவில் நடந்த ஒரு கொள்ளை வழக்கில் நான்கு போ் கைது செய்யப்பட்டதாக காவல்துறை அதிகாரி ஒருவா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா். இது குறித்து தில்லி காவல் துறை உயரதிகாரி கூறியதாவது: கைது செய்யப்ப... மேலும் பார்க்க