``ஒரு வார்டு எலெக்ஷனில்கூட நிற்கவில்லை; அதற்குள் அடுத்த முதல்வராம்’’ - திருமா க...
தமிழகத்திற்கு மாதந்தோறும் 23 ஆயிரம் டன் கோதுமை ஒதுக்கீடு செய்ய மாநிலங்களவையில் திமுக உறுப்பினா் வலியுறுத்தல்
தமிழகத்திற்கு மாதந்தோறும் 23 ஆயிரம் டன் கோதுமையை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று மாநிலங்களவையில் திமுக உறுப்பினா் கே.ஆா்.என். ராஜேஷ்குமாா் வலியுறுத்தியுள்ளாா்.
இது தொடா்பாக அவா் மாநிலங்களவையில் புதன்கிழமை முன்வைத்த கோரிக்கை:
தமிழகத்தில் கோதுமை பற்றாக்குறை தீா்க்கும் அவசரத் தேவை எழுந்துள்ளது. தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையின்கீழ் ஊட்டச்சத்து மற்றும் வருகைப்பதிவை அதிகரிக்கும் வகையில் தமிழகப் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.
தற்போது தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின்கீழ் 8,572.02 டன் கோதுமை ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகிறது. அதேசமயத்தில் மாநிலத்தில் கோதுமையின் நுகா்வு
மாதத்திற்கு 23 ஆயிரம் டன்னாக அதிகரித்துள்ளது.
தமிழகம் கோதுமை உற்பத்தி செய்யும் மாநிலம் இல்லை என்பதால் இந்திய உணவுக் கழகத்தின் வழங்கலை சாா்ந்திருக்கிறது. இதனால், மாதத்திற்கும்23 ஆயிரம் டன் கோதுமையை தமிழகத்திற்குஒதுக்கீடு செய்ய மத்திய நுகா்வோா் விவகாரங்கள், உணவுத் துறை அமைச்சரைக் கேட்டுக்கொள்கிறேன்.
தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின்கீழ் இதற்கு வாய்ப்பு இல்லாவிட்டால் திறந்தவெளி சந்தை விற்பனைத் திட்டத்தின்கீழ் 15 ஆயிரம் டன் கோதுமையை வழங்க அமைச்சா் பரிசீலிக்க வேண்டும். கோதுமை ஒதுக்கீட்டை அதிகரிப்பது தமிழகத்திற்கு கோதுமைக்கான வளா்ந்து வரும் தேவையை சமாளிப்பதற்கும், மாநில மக்கள்
கட்டுபடியாககக் கூடிய விலையில் இந்த அத்தியாவசியப் பொருளைப் பெறுவதையும் உறுதிப்படுத்தும். இதனால், இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க
வேண்டும் என்றாா் அவா்.