Sujatha Karthikeyan: விருப்ப ஓய்வு பெறும் ஒடிஷாவின் 'பவர்ஃபுல் IAS' - யார் இவர்?
'தமிழகக் கல்வி நிதியை நிறுத்தி வைப்பது நியாயமில்லை' - நிதியை வழங்க நாடாளுமன்ற நிலைக்குழு பரிந்துரை
தமிழகத்தில் தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்த மத்திய பாஜக அரசு முயற்சித்து வருகிறது. ஆனால் தேசிய கல்விக் கொள்கை என்ற பெயரில் இந்தி மொழியை மத்திய அரசு திணிப்பதாக குற்றம் சாட்டியுள்ள திமுக அரசு அதனை ஏற்க மறுக்கிறது.
இதனால் தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய கல்வி நிதியை மத்திய அரசு நிறுத்தி வைத்திருக்கிறது. தேசிய கல்விக் கொள்கையை ஆதரித்தால் மட்டுமே நிதியை வழங்க முடியும் என்று மத்திய அரசு தெரிவித்து வருகிறது.

இந்நிலையில் தமிழ்நாட்டினுடைய கல்வி நிதியை மத்திய அரசு நிறுத்தி வைப்பது நியாயம் இல்லை என்று நாடாளுமன்ற நிலைக்குழு தெரிவித்துள்ளது.
நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடந்து வருகிறது. இதில் நேற்று ராஜ்யசபாவில் காங்கிரஸ் எம்.பி. திக்விஜய சிங் தலைமையிலான நாடாளுமன்ற நிலைக்குழு அறிக்கையினை சமர்பித்தது. அதில், "பிஎம் ஸ்ரீ திட்டத்தில் இணையாததால், தமிழ்நாட்டுக்கு ரூ.2,152 கோடி வழங்காமல் உள்ளது மத்திய அரசு.
அதேபோல கேரளாவுக்கு ரூ.859 கோடி, மேற்கு வங்கத்திற்கு ரூ. 1,000 கோடி வழங்காமல் உள்ளது மத்திய அரசு. சமக்ரா சிக்ஷா அபிநயான் திட்டத்தின் கீழ் இதை வழங்க வேண்டும். வழங்காமல் இருப்பது நியாயமில்லாதது.
அனைவருக்கும் கல்வி உரிமை சட்டத்தின் இலக்குகளை அடையும் விதமாகவே, பிஎம்ஸ்ரீ திட்டத்துக்கு முன்பு சமக்ரா சிக்ஷா அபியான் திட்டம் தொடங்கப்பட்டது.

ஆனால் இப்போது தேசிய கல்விக் கொள்கைக்காக இதனை புறக்கணிக்க முடியாது. நிதிகளை விடுவிப்பதில் தாமதப்படுத்துவதால் பள்ளிகளின் உள்கட்டமைப்பு, மாணவர்களின் முன்னேற்றம் தடைப்படுகிறது.
ஆசிரியர்களின் திட்டங்கள், பள்ளி உட்கட்டமைப்பு பரமாரிப்பு போன்றவற்றில் இடையூறு ஏற்படாமல் தடுக்க உடனே நிதியை தமிழ்நாடு, கேரளா மற்றும் மேற்கு வங்க மாநிலங்களுக்கு நிதியை அனுப்ப வேண்டும்" என்று நாடாளுமன்ற நிலைக்குழு தெரிவித்துள்ளது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs