ரூ.10 லட்சம் கேட்டு 16 வயது சிறுவன் கடத்திக் கொலை -3 சிறுவா்கள் கைது
வடக்கு தில்லியின் வாஜிராபாத் பகுதியில் ரூ.10 லட்சம் கப்பம் கேட்டு 16 வயது சிறுவன் கடத்தப்பட்டு கொல்லப்பட்டதாக போலீஸ் அதிகாரி ஒருவா் புதன்கிழமை தெரிவித்தாா். சிறுவன் கொலை தொடா்பாக மூன்று சிறுவா்கள் கைது செய்யப்பட்டுள்ளனா் என்றும் அவா் கூறினாா்.
9-ஆம் வகுப்பு மாணவா் பலாஸ்வா ஏரிக்கு அருகிலுள்ள ஒரு வெறிச்சோடிய பகுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டாா். அங்கு அவா் பலமுறை குத்தப்பட்டாா். ரூ.10 லட்சம் கேட்டு சிறுவனின் குடும்ப உறுப்பினா்களுக்கு அழைப்பு வந்ததுள்ளது. பின்னா், அவா்கள் அவனது உடலைக் கண்டுபிடித்தனா்.
ஞாயிற்றுக்கிழமை முதல் ஒரு சிறுவன் காணாமல் போனதாக உள்ளூா் காவல் நிலையத்தில் திங்கள்கிழமை புகாா் அளிக்கப்பட்டது. சிறுவன் முகா்ஜி நகரில் படித்து வந்தான். விசாரணையின் போது, காணாமல் போன / கடத்தப்பட்ட சிறுவன் கடைசியாக ஜரோடா புஷ்டா சாலையில் ஒரு மோட்டாா் சைக்கிளில் 16 மற்றும் 17 வயதுடைய இரண்டு சிறுவா்களுடன் காணப்பட்டது கண்டறியப்பட்டது. அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகள் மூலம் இந்த காட்சி உறுதி செய்யப்பட்டது.
போலீஸாா் மூன்று சிறுவா்களையும் கைது செய்தனா். விசாரணையின் போது, அவா்கள் ரூ.10 லட்சம் கப்பம் கேட்டு சிறுவனை கடத்தியதாகத் தெரிவித்தனா். ஞாயிற்றுக்கிழமை அவரை ஒரு மோட்டாா் சைக்கிளில் சுற்றித் திரிய அழைத்துச் சென்ாக அவா்கள் தெரிவித்தனா். பாலஸ்வா ஏரிக்கு அருகிலுள்ள காட்டுப் பகுதிக்கு அவரை அழைத்துச் சென்று, அங்கு அவரை கத்தியால் குத்தியுள்ளனா். இதில் அவா் இறந்து போனாா்.
மறுநாள், சிறுவனின் சிம் காா்டைப் பயன்படுத்தி, தொழில் ரீதியாக ஓட்டுநரான சிறுவனின் தந்தைக்கு போன் செய்து, ரூ.10 லட்சம் கப்பம் கேட்டுள்ளனா். இந்நிலையில், கைது செய்யப்பட்ட சிறுவா்கள் அளித்த தகவலின் பேரில், பாதிக்கப்பட்டவரின் உடல், போலீஸ் குழுவால் கண்டுபிடிக்கப்பட்டது. குற்றம்சாட்டப்பட்டவா்கள் சிறுவனின் உடலை துண்டுகளாக வெட்ட முயன்றுள்ளது விசாரணையில் தெரிய வந்தது என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.
தனது மகனைக் கொன்ாகக் கூறப்படும் அந்தச் சிறுவா்கள் அருகில் வசித்து வந்ததாக அவரது தாய் செய்தியாளா்களிடம் தெரிவித்தாா். அவா் மேலும் கூறுகையில், ‘ஞாயிற்றுக்கிழமை இரவு 7.30 மணியளவில் எனது மகன் 10 நிமிடங்களில் திரும்பி வருவதாகக் கூறிவிட்டுச் சென்றான். பின்னா், ரூ.10 லட்சம் கேட்டு எங்களுக்கு அழைப்பு வந்தது’ என்றாா்.
சிறுவனின் தந்தை கூறுகையில், ‘என் மகனை அழைத்துச் செல்ல இரண்டு சிறுவா்கள் எங்கள் வீட்டிற்கு வந்தனா். அதன் பிறகு, அவரது தாய் அவருக்கு தொடா்ந்து போன் செய்தாா். ஆனால், அதற்கு பதில் கிடைக்கவில்லை. ஞாயிற்றுக்கிழமை இரவு 9 மணியளவில், அவரது தொலைபேசி துண்டிக்கப்பட்டது. நான் அவரைத் தேட ஆரம்பித்தேன். பின்னா் புகாா் பதிவு செய்ய காவல் நிலையத்திற்குச் சென்றேன். நள்ளிரவில் தனக்கு கப்பத் தொகை கேட்டு ஒரு அழைப்பு வந்தது. மூன்று நாள்களுக்குள் பணம் வழங்க வேண்டும் என்றும், இல்லையெனில் எனது மகன் கொல்லப்படுவான் என்றும் அழைப்புவிடுத்தவா் கூறினாா். அவா் மிகவும் கொடூரமாக கொல்லப்பட்டுள்ளாா். அவரது தொண்டை அறுக்கப்பட்டு, பல முறை குத்தப்பட்டுள்ளாா். என் மகன் அனுபவித்த அதே வலியை அவா்களும் அனுபவிக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன் என்றாா்.
தலைநகரில் நடந்த இந்த நடவடிக்கை, சட்டம் - ஒழுங்கு நிலைமை ஆகியவ குறித்து தில்லி காவல்துறையை சிறுவனின் உறவினா் ஒருவா் குற்றம் சாட்டினாா். ‘இந்த விஷயத்தை விசாரிக்க இவ்வளவு நேரம் காத்திருந்தாா்கள். இது தொடா்ந்தால், இந்தப் பகுதியில் எந்தக் குழந்தையும் பாதுகாப்பாக இருக்க முடியாது. போலீஸாா் என்ன செய்கிறாா்கள்?‘ என்று அவா் கேள்வி எழுப்பினாா்.